நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 12 ஜனவரி, 2012

கடையநல்லூரில் இன்று முதல் ஆட்டு இறைச்சிக்கு தடை!!


கடையநல்லூரில் கடைகளில் விற்கப்படும் ஆட்டு இறைச்சி  பொதுவாக ஓர் இடத்தில வைத்து அறுக்கப்பட்டு அந்தந்த கடை உரிமையாளர்களால்  விற்பனையாகின்றன. இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய  பகுதியான கடையநல்லூரில் இறைச்சி போன்ற அசைவ உணவுகளை ஹலாலான முறையில் உண்பதே வழக்கம்.
    


ஆகவே ஆடுகள் அறுக்க கூடிய இடங்களில் ஊர் ஜமாத்தின் சார்பில் ஒருவரை நியமித்து ஆடுகள் ஹலால் முறையில் அறுக்கபட்டு விநியோகிக்க படுகிறதா என்று


தெரிந்துகொள்ளபடுகிறது.  இந்த நிலையில் இன்று ஆடுகள் அறுக்கப்படும் இடத்தில் ஏற்கனவே இறந்தஆட்டை  அறுப்பதாக  செய்தியை அறிந்த SDPI   நகர தலைவரும் 29 வது வார்டு கவுன்சிலருமான S.நயினா  முஹம்மத் (எ) கனிமற்றும் பொதுமக்களும், ஜமாஅத்தார்களும்  பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா மேற்கு மாவட்ட தலைவர் J  ஜாபர் அலி உஸ்மானி அவர்களும்  அவ்விடத்தை பார்வையிட்டு உடனே நகராட்சி ஆணையாளருக்கும் நகரமன்ற  தலைவி   அவர்களுக்கும் தகவல் தெருவிக்கபட்டது .அதன்பின் நகரமன்ற தலைவி , நகராட்சி ஆணையாளர் பார்வையிட செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறித்தினார் .  அதனடிப்படையில் கடையநல்லூர் முழுவதும் இன்று முதல் ஆட்டிறைச்சி விற்ககூடாது என்றும் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் என்று நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார். 
     
இந்த சம்பவத்தை தொடர்ந்து இறந்த ஆட்டு இறைச்சியை விற்பனை செய்ய முயற்சித்ததை கண்டித்து பேட்டை மற்று ஊரணி பள்ளி ஜமாதார்களால் இன்று (12.01.12) முதல் 5 நாளைக்கு ஆட்டிறைச்சி வாங்க வேண்டாமென்று கேட்டு கொள்ளப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கடையநல்லூர் அணைத்து பள்ளிவாசலிலும் அறிவிப்பு வெளியானவண்ணம் உள்ளது.

(குறிப்பு:  கடந்த 20 நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் புளியமுக்கு தெருவில் சுமார் 20 ஆட்டு தலையுடன் விற்பனை செய்ய வந்தவரை S .நயினா  முஹம்மத் (எ) கனி பிடித்து விரட்டியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . )