நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 10 ஜனவரி, 2012

முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடு(Reservation): குர்ஷிதின் மனைவிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்


புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் ஃபாரூக்காபாத் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷிதின் மனைவியுமான லூயிஸ் குர்ஷிதிற்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு வேலைகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டில் 9
சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என சல்மான் குர்ஷித் உரை நிகழ்த்தினார். இதனை சுட்டிக்காட்டி குர்ஷித் தேர்தல் ஒழுங்குமுறை சட்டத்தை மீறிவிட்டார் என பா.ஜ.க துணை தலைவர் முக்தா அப்பாஸ் நக்வி அளித்த புகாரின் பெயரில் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மூன்று தினங்களுக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷன் கோரியுள்ளது.
முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற கொள்கையை காட்டி காங்கிரஸ் மாநிலத்தில் வகுப்புவாத மோதலை உருவாக்க முயற்சிக்கிறது என நக்வி குற்றம் சாட்டியிருந்தார்.
அதேவேளையில், பா.ஜ.கவின் குற்றச்சாட்டை சல்மான் குர்ஷித் நிராகரித்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறியதாவது: பா.ஜ.க ராமர் கோயிலை கட்டுவோம் என பிரச்சாரம் செய்யும் வேளையில் நான் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை எடுத்துரைத்தேன். கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் முன்னரே உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க ஆட்சியில் பங்கேற்கும் பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ்குமாரும் இதைப்போன்று அமுல்படுத்தியுள்ளார். இதுத் தொடர்பாக பா.ஜ.க முதலில் தனது கூட்டணி கட்சியிடம் புகார் அளிக்கட்டும்’ என கூறியுள்ளார்.
குர்ஷிதின் அறிக்கை தவறில்லை என்றும், உ.பியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவோம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஷித் ஆல்வி கூறினார்.