நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

ராமாயணம் விவாதம்:டெல்லி பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பு


delhi-university


புதுடெல்லி : டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடத்திட்டத்திலிருந்து ராமாயணம் குறித்த உரைநடையை ஹிந்துத்துவா சக்திகளின் நிர்பந்தத்தை தொடர்ந்து நீக்கியதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு எதிரான ஆன்லைன் பிரச்சாரத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துவருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தை சார்ந்த மற்றும் சாராத ஏராளமான பேராசிரியர்கள், மாணவர்களின் தலைமையில் எதிர்ப்பு வலுத்துவருகிறது.


இடதுசாரி இயக்கங்களின் தலைமையில் பல்கலைக்கழகத்தில் விவேகான்ந்தர் சிலையின் அருகிலிருந்து துணைவேந்தரின் அலுவலகத்திற்கு இன்று கண்டன பேரணி நடத்தப்படுகிறது. வலதுசாரி அமைப்புகள் வரலாற்றிற்கு எதிராக நடத்தும் அக்கிரமங்களை தடுக்கவேண்டுமென கோரி இப்போராட்டம் நடத்தப்படுகிறது.

வரலாற்று பாடத்திட்டத்திலிருந்து உரைநடையை நீக்கியதற்கு எதிராக ஆன்லைன் மனுவில் பிரபல வரலாற்று அறிஞர் பேராசிரியர் பிபின் சந்திரா, பேராசிரியர் ரொமீலா தாப்பர், பேராசிரியர் மிருதுலா முகர்ஜி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

வரலாற்று ஆசிரியர் எ.கெ.ராமனுஜத்தின் ‘முன்னூறு ராமாயணங்கள்’ என்ற உரைநடை வரலாற்றுப்பாடத்திட்டத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. இந்த பாடத்தை தொடரலாம் என வரலாற்றுத்துறை ஏற்கனவே தெளிவாக்கிய பிறகும் பல்கலைக்கழக அகடாமிக் கவுன்சில் உரைநடையை நீக்கியிருந்தது. இந்நடவடிக்கையை வரலாற்று ஆசிரியர்கள் கண்டித்திருந்தனர். பல்வேறு இடங்களில் ராமாயணத்தின் நூற்றுக்கணக்கான வேறுபாடுகள் தொடர்பான ஆய்வுதான் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இப்பகுதியை பாடத்திட்டத்தில் சேர்த்ததற்கு எதிராக 2008-ஆம் ஆண்டு ஏ.பி.வி.பி முதலில் களமிறங்கியது.கடந்த மாதம் பாடப்பகுதியை நீக்க பல்கலைக்கழகம் தீர்மானித்தது.

நூற்றுக்கணக்கான ராமாயண கதைகள் ஆசியாவில் புழக்கத்தில் உள்ளன. இது வேறுபட்ட கலாச்சாரங்களின் பாரம்பரியங்களுடைய பகுதி எனவும் ஹிந்து கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாக சுயமாக பிரகடனப்படுத்துபவர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து வரலாற்றை குழி தோண்டி புதைக்க அனுமதிக்கக்கூடாது எனவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.