நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 29 அக்டோபர், 2011

இறையன்பைப் பெறக்கூடிய துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்


காலங்களை வகுத்துத்தந்த அல்லாஹ் அதனை பன்னிரண்டு மாதங்களாக மாற்றி அவற்றில் நான்கு மாதங்களை கண்ணியத்துக்குரிய மாதங்களாக மாற்றியிருக்கின்றான். ‘‘நிச்யமாக வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்தே அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என அல்லாஹ்வின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் கண்ணியத்துக்குரியவை. இதுதான் நேரான மார்க்கமாகும் (தவ்பா-36) ‘‘சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும் (பகறா-194)
‘‘வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்தே காலம் பன்னிரண்டு மாதங்கள் என சுழல்கின்றது. அவற்றில் நான்கு கண்ணியத்துக்குரியவை. அவையாவன தொடர்ந்து வரும் மூன்று மாதங்களான துல்கஃதாதுல்ஹஜ்முஹர்ரம் ஆகியனவும் மற்றும் ரஜப் மாதமுமாகும் என நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது குறிப்பிட்டார்கள். (புகாரிமுஸ்லிம்)

நாம் தற்போது போராட்டங்களும் அநீதியிழைத்தலும் தடைசெய்யப்பட்ட கண்ணியத்திற்குரிய மாதங்களில் இருக்கின்றோம். ஹஜ் கடமைகளுக்கு தயாராகி பாதுகாப்பாகச் சேல்லல்ஹஜ் கிரியைகளை நிறைவேற்றல்அவற்றை முடித்துவிட்டு பாதுகாப்பாக தமது இடங்களுக்கு திரும்பிவரல் போன்ற காரணங்களால்தான் இந்த மாதங்கள் இந்தளவு சிறப்புப் பெறுகின்றன.
இந்த கண்ணியத்துக்குரிய மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்பவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டசுவனத்தைப் பரிசாகப் பெறும் பாக்கியவான்கள். எனினும் இந்தப் பாக்கியத்தைப் பெறாத வசதியற்றவர்களுக்கும் அல்லாஹ் ஓர் அருளாக துல்ஹஜ் முதல் பத்து நாட்களை அதிகமான நன்மைகளைப் பெற்றுத்தரும்அவனுக்கு விருப்பமான நாட்களாக ஆக்கியிருக்கின்றான். இதனை பயன்படுத்திக்கொள்ள நாங்கள் எம்மால் முடியுமான அளவு முயற்சி செய்வோம்.
துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்
01. அல்லாஹ் சத்தியம் பண்ணுகின்ற பத்து நாட்கள் ‘‘அதிகாலையின் மீதும் பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக (பஜ்ர் - 01)
02. இந்த நாட்களில் மேற்கொள்ளப்படுகின்ற அமல்களை அல்லாஹ் மிகவும் நேசிக்கின்றான். அதிகமான கூலிகளை வழங்குகின்றான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரிய நல்லமல்கள் இந்த துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படுகின்ற அமல்களாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விடவும் இது சிறப்புக் குரியதா?’ என ஒருவர் கேட்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விடவும் சிறந்தது. எனினும் ஒருவர் ஜிஹாதுக்காக தனது செல்வத்துடன் சென்று ஷஹாதத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவராவிட்டால் அது இதை  விடவும் சிறப்புக்குரியது’ என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (புகாரி 2-457, திர்மிதி-3-463)
03. இந்த பத்து நாட்களிலும் அல்லாஹ்வின் நாமம் உச்சரிக்கப்படுவதாக அல்லாஹ் ஸுறதுல் ஹஜ்ஜின் 28ம் வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
04. ‘‘ஸலப்கள் மூன்று பத்து நாட்களை கண்ணியப்படுத்துபவர்களாக இருந்தார்கள். அவையாவன ரமழான் இறுதிப் பத்து நாட்கள். துல்ஹஜ் முதல் பத்து நாட்கள். முஹர்ரம் முதல் பத்து நாட்கள்என அபூ உஸ்மான் அந்நஹ்தி குறிப்பிடுகின்றார். (லதாஇபுல் மஆரிப் பக் 38)
இந்த நாட்களில் மேற்கொள்ள வேண்டிய நற்செயல்கள்
01 நோன்பு நோற்றல் – ‘‘அறபா தினத்தில் நோற்கப்படும் நோன்பு கடந்த வருடத்திற்கும் வருகின்ற வருடத்துக்குமான முன்பின் பாவங்களை மன்னிக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதே போன்று ‘‘நான்கு விடயங்களை நபி (ஸல்) அவர்கள் விட்டதில்லை. முஹர்ரம் பத்தில் பிடிக்கின்ற ஆஷுறா நோன்புதுல்ஹஜ் முதல் பத்து தினங்களும் நோற்கின்ற நோன்பு, (ஒவ்வொரு மாதமும் பிறை 13, 14, 15) அயாமுல் பீழ் நோன்புகள்ழுஹா இரண்டு ரக்அத்கள் என ஹப்ஸா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்) ‘‘துல்ஹஜ் ஆரம்ப பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் நோன்பு நோற்பதை விட்டதில்லை என ஆயிஷா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)
02. இரவு நேரத் தொழுகையில் ஈடுபடல் ‘‘கடமையாக்கப்பட்ட தொழுகைகளுக்கு அடுத்து சிறப்புக்குரிய தொழுகை இரவு நேரத் தொழுகையாகும் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
03. துஆக்களில் ஈடுபடல் ‘‘மிகவும் சிறப்புக்குரிய பிரார்த்தனை அறபா தினத்தில் கேட்கப்படும் பிரார்த்தனையாகும் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
04. எமது எண்ணங்களை தூமைப்படுத்தி அதிகமான நல்லமல்களில் ஈடுபடல். இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்கள் அல்லாஹ்வின் பாதையில் போராடுவதை விடவும் சிறந்தது என நபி (ஸல்) குறிப்பிட்ட ஹதீஸை நாம் மேலே பார்த்தோம்.
05. அதிகம் திக்ர் செய்தல் ‘‘இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரியவை. எனவே அதிகமதிகம் லா இலாஹ இல்லல்லாஹ்அல்லாஹு அக்பர்அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இவ்வாறு பல நல்லமல்களில் போட்டி போட்டு செயற்படுவோம். துல்ஹஜ் முதல்பத்து நாட்களைப் பயன்படுத்துவோம். அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்வோம். அவனுடைய நேசத்துக்குரிய அடியார்களாக மாறுவோம்.