நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

கஷ்மீரில் நான்கு மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் உடனடியாக வாபஸ்




Jammu-Kashmir_4

புதுடெல்லி : ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் ஜம்மு-கஷ்மீரின் நான்கு மாவட்டங்களிலிருந்து உடனடியாக வாபஸ் பெறப்படும். ஜம்முவிலும், கஷ்மீர் பள்ளத்தாக்கிலும் இரண்டு வீதம் மாவட்டங்களிலிருந்து இச்சட்டம் வாபஸ் பெறப்படும்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தையும், தொந்தரவான பகுதிகள் சட்டமும்(Disturbed Area Act) வாபஸ் பெறப்படும் என முன்னர் ஜம்மு-கஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் அறிவித்திருந்தார். ஆனால், எந்த மாவட்டங்களிலிருந்து இச்சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என தீர்மானிக்கவில்லை. கஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகர், புத்காம் மாவட்டங்கள், ஜம்மு பகுதியில் ஜம்மு, ஸம்பா மாவட்டங்களின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலிருந்து முதல்கட்டமாக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ் பெறப்படும்.

தொந்தரவான பகுதிகள் சட்டத்தை மறு ஆய்வு செய்ய உமர் அப்துல்லாஹ் டி.ஜி.பி குல்தீப் கோடா, உள்துறை செயலாளர் பி.ஆர்.வர்மா ஆகிய உறுப்பினர்கள் அடங்கிய இரண்டு குழுக்களை அமைத்துள்ளார்.
கஷ்மீர், ஜம்மு என பிரிக்கப்பட்ட குழுக்களில் இருவரும் பொது உறுப்பினர்களாவர்.கஷ்மீர் குழுவில் 15 மத்திய ராணுவ கமாண்டரும், ஜம்மு குழுவில் 16 மத்திய கமாண்டரும் உறுப்பினர்களாவர்.

கஷ்மீரில் சில பகுதிகளில் தொந்தரவான பகுதிகள் சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து பரிசோதிக்க அண்மையில் மாநில ராணுவ அதிகாரிகள் அடங்கிய உயர் அதிகார குழுவின் கூட்டம் நடந்தது. இப்பிரதேசங்களிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை வாபஸ் பெறுவதின் ஒரு பகுதியாக இக்கூட்டம் நடைபெற்றதாக கருதப்படுகிறது. டி.ஜி.பி, முதன்மை செயலாளர், 15 மத்திய கமாண்டர் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இவ்விவகாரத்தை முழுமையாக விவாதித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொந்தரவான பகுதிகள் சட்டத்தை வாபஸ் பெற அமைச்சரவைக்கு சிபாரிசுச்செய்தபிறகு குழுவின் கூட்டம் உடனடியாக நடைபெறும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொந்தரவான பகுதிகள் சட்டத்தை வாபஸ் பெற்றால் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டமும் இயல்பாகவே அங்கே வாபஸ் பெறப்பட்டுவிடும் என அண்மையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். கொடூரச்சட்டமான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை வாபஸ்பெறவேண்டுமென நீண்டகாலமாக கஷ்மீர் மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். கஷ்மீர் மாநிலத்தில் 22 மாவட்டங்களில் 20-இல் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் அமுலில் உள்ளது.லேயும், கார்கிலும்தான் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் அமுலில் இல்லாத மாவட்டங்களாகும்.