நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 29 அக்டோபர், 2011

கருத்து வேறுபாடு உச்சக்கட்டம்:பிளவை நோக்கி ஹஸாரே குழு

anna teamபுதுடெல்லி : ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் மக்களின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிய ஹஸாரே குழுவினர் தற்பொழுது தீவிர கருத்துவேறுபாட்டினால் பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். கடுமையான கருத்து வேறுபாடுகளுக்கிடையே குழுவின் மத்திய குழு சனிக்கிழமை காஸியாபாத்தில் கூடுகிறது.
அமைப்பு சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க இரண்டு மாதத்தில் முதன் முதலாக அழைக்கப்பட்டுள்ள இக்கூட்டத்தை புறக்கணிக்க உறுப்பினர்களான சந்தோஷ் ஹெக்டே, மேதா பட்கர் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர். மவுன விரதத்தின் பெயரால் ஹஸாரே இக்கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார். பிரபல வழக்கறிஞர்களான சாந்திபூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் பங்கேற்பது குறித்தும் சந்தேகம் நிலவுகிறது.
சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு சர்ச்சையில் சிக்கியுள்ள கிரண்பேடி மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் தலைவகிப்பார்கள். வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் ஹஸாரே கூட்டத்தை கவனிப்பார் என கூறப்பட்டாலும், நெருக்கடியான சூழலில் முக்கியமான பங்கை வகிக்காமல் ஹஸாரே நழுவுவது குழு உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
26 உறுப்பினர்களை கொண்ட மத்திய கமிட்டியின் கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய தினம் மத்திய கமிட்டியின் உறுப்பினரும், காஸியாபாத்தை சார்ந்த பேராசிரியருமான குமார் விஸ்வாஸ் ஹஸாரேக்கு எழுதிய கடிதத்தில் மத்திய கமிட்டியை கலைத்துவிட்டு புதிய கமிட்டியை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வலுவான கூட்டமைப்பாக செயல்பட்ட ஹஸாரேவின் லோக்பால் மத்திய கமிட்டியில் கடுமையான கருத்து வேறுபாடுகள் உருவாக காரணங்கள் பல. லோக்பால் என்ற ஒரே செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்ட ஹஸாரே குழுவினர் ஹிஸார் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் மூலம் பா.ஜ.க ஆதரவு வேட்பாளர் வெற்றிப்பெற காரணமானார்கள்.
ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி ஆகியோரின் சங்க்பரிவார் மமதையும், ஆதிக்க எண்ணங்களும் பிற உறுப்பினர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கஷ்மீரில் விருப்ப வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கருத்துதெரிவித்ததால் தாக்கப்பட்ட பிரசாந்த் பூஷணை தவறாக விமர்சித்ததுடன் தேவைப்பட்டால் கமிட்டியிலிருந்து வெளியேற்றுவோம் பகிரங்கமாக அறிக்கை ஹஸாரே தரப்பிலிருந்து வெளியிடப்பட்டது.
அரசு சலுகையில் விமானத்தில் பயணிக்கும் கிரண்பேடி நிகழ்ச்சிக்கு அழைப்பவர்களிடம் உயர்வகுப்பிற்கான கட்டணத்தை வசூலித்து அத்தொகையை தனது சொந்த அறக்கட்டளைக்கு அளித்த மோசடி விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. ஹஸாரே குழுவினருக்கு வரும் பணத்தை தனது அறக்கட்டளைக்கு கணக்கிற்கு மாற்றிய அரவிந்த் கேஜ்ரிவாலின் நடவடிக்கையும் சர்ச்சையை கிளப்பியது.
இதைத்தவிர மகஸேஸே விருதுப்பெற்ற ரஜீந்தர்சிங், கேரளாவைச்சார்ந்த பி.வி.ராஜகோபால், டெல்லி ஆர்ச் பிஷப் வின்செண்ட் கோண்ஸஸாவோ ஆகியோர் மத்தியக்கமிட்டியிலிருந்து விலகினர். ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் வேளையில் சுவாமி அக்னிவேஸ் ஹஸாரே குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஹிஸாரில் தங்களுக்கு எதிராக ஹஸாரே குழுவினர் பிரச்சாரத்திற்கு களமிறங்கியது ஊழலில் சிக்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆயுதமாக மாறியது. பின்னர் உருவான சர்ச்சைகளை முன்வைத்து ஹஸாரே குழுவினர் மீது தாக்குதலை தொடர்ந்தது காங்கிரஸ். ஹிந்துத்துவா பயங்கரவாத நெருக்கடியில் சிக்கியிருக்கும் சங்க்பரிவார் மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் உபகரணங்கள்தாம் ஹஸாரே முதல் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் வரையுள்ளவர்கள் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
ஹஸாரே மவுன விரதத்தை தொடர்வதும், மத்திய கமிட்டி உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுவதும் ஹஸாரே குழுவினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. நம்பிக்கையை இழந்துவிட்ட ஹஸாரே குழுவினரின் புதிய முயற்சிகளுக்கு மக்களின் ஆதரவு முன்புபோல் கிடைக்காது என மத்தியக்கமிட்டியை சார்ந்தவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஊழலுக்கு எதிராக அரசை விமர்சிப்பதற்கு பதிலாக தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள ஹஸாரே குழுவினர் எதிர்கால நிகழ்ச்சிகளை தனித்து நின்று செயல்படுத்த முடியாமல் இருட்டில் துளாவுகின்றனர்.