நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 30 டிசம்பர், 2011

போஸ்னியாவில் முஸ்லிம்-க்ரோட்-ஸெர்ப் கூட்டணி அரசு


ஸராயவோ : 14 மாதங்களாக தொடரும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை முடிவுக்கு கொண்டுவர முஸ்லிம்-க்ரோட்-ஸெர்ப் கூட்டணி அரசை உருவாக்க தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சியை தவிர்க்க புதிய பட்ஜெட்டை நிறைவேற்றவும் கட்சிகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோவிலும் உறுப்பு நாடாக மாறும் போஸ்னியாவின் முயற்சி எளிதாகும்.
சர்வதேச நிதி நிறுவனங்கள் முடக்கியுள்ள நிதிகள் கிடைப்பதற்கும் இத்தீர்மானம் உதவிகரமாக அமையும்.
ஒப்பந்தத்தின்படி க்ரோட்டுகள் பிரதமர் பதவியையும், முஸ்லிம்களுக்கு வெளியுறவுத்துறையும் கிடைக்கும். அமைச்சரவையில் நான்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களும், மூன்று உறுப்பினர்கள் வீதம் க்ரோட்டுகள் மற்றும் ஸெர்பியர்கள் இடம்பெறுவர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தல் தொடர்பான சர்ச்சை அரசியல் ஸ்திரமற்ற தன்மை உருவாக காரணமானது.