நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 31 டிசம்பர், 2011

ஹமீது அன்சாரி மீது அபாண்டம்: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்


hameed ansari
டெல்லி : இந்திய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஹமீது அன்சாரி மீது பா.ஜ.க அபாண்டமாக பழி சுமத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் லோக்பால் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கூச்சல், குழப்பம் நிலவியதால், ஹமீது அன்சாரி காலவரையறையின்றி அவையை ஒத்திவைத்தார்.
அவரது இந்த முடிவை பாஜக விமர்சித்துள்ளது. மசோதா நிறைவேறும் வரையோ அல்லது குடியரசுத் தலைவரிடம் கால நீட்டிப்பு பெறும் வரையிலோ அவையை நடத்தியிருக்க வேண்டும் என்று அக்கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும் சோனியா காந்தியின் அறிவுரைப்படியே அன்சாரி நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பாஜகவின் குற்றச்சாட்டு நியாயமற்றது என்றும், குறைகூறத் தகுதியில்லாதது என்றும் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
“தங்களுக்கு எதிராக முடிவுகள் வரும்போதெல்லாம் தேர்தல் ஆணையம், சிபிஐ உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரங்கள் மீது பாஜக குற்றம் சொல்வது புதிதல்ல. தொடர்ச்சியான ஒன்றுதான். எந்த ஒரு பிரச்னையையும் உணர்வுரீதியாகத்
தூண்டுவதையும், சதிக் கண்ணோட்டத்துடன் அணுகுவதையுமே பாஜக வழக்கமாகக் கொண்டுள்ளது. லோக்பால் நிறைவேறுவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால் மசோதா நிறைவேறாததற்கான காரணத்தை மற்றவர்கள் மீது சுமத்தப் பார்க்கிறார்கள். ஜனநாயகத்தைக் கொலை செய்த குற்றத்தைச் செய்தவர்களே, பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி சுமத்துகிறார்கள்” என்றார்.