நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

ஹஸாரே-ஆர்.எஸ்.எஸ் உறவு:நான் கூறியது நிரூபிக்கப்பட்டுள்ளது – திக் விஜய்சிங்


ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா  ஹஸாரே
புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா  ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது.
இந்நிலையில் அன்னா ஹஸாரே ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்புலத்தில் 
செயல்படுகிறார் என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியின்  செயலாளர் திக்விஜய்சிங் இவ்விவகாரம் தொடர்பாக ட்விட்டர் சமூக  இணையதளத்தில் கூறியிருப்பதாவது:
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் இணைந்து ஹஸாரே  பணியாற்றியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் 1983-ல்  ஆர்.எஸ்.எஸ். பணிகளில் நானாஜியின் செயலராக ஹஸாரே இருந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள ‘நய் துன்யா’ பத்திரிகையின் முகப்புப்  பக்கத்தைப் பாருங்கள்.
ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்பு இல்லை என ஹஸாரே மீண்டும் மீண்டும் கூறுகிறார். அவர் கூறுவதை நம்புவதா, இல்லை  பத்திரிகையில் வெளியாகி உள்ள புகைப்படத்தை நம்புவதா? நான் ஏற்கெனவே  கூறியது சரிதான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லியில்  அதிக குளிர் என்பதால் உண்ணாவிரதம் இருக்க மும்பையை ஹஸாரே தேர்வு  செய்யவில்லை. அதிக நிதி திரட்டுவதற்காகத்தான் அவர் மும்பையைத் தேர்வு செய்துள்ளார் என்றும் திக்விஜய் தெரிவித்துள்ளார்.