நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 30 டிசம்பர், 2011

தானே புயல் கோரத்தாண்டவத்துக்கு புதுச்சேரி மற்றும் கடலூர் சின்னாபின்னமானது


கடலூர் : தானே புயல் கோரத்தாண்டவத்துக்கு புதுச்சேரி மற்றும் கடலூர் சின்னாபின்னமானது. மிக மோசமாக தாக்கிய புயலுக்கு மொத்தம் 40 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. நூற்றுக்கணக்கான படகுகள் நொறுங்கின. புதுச்சேரி தெருக்கள் எல்லாம் அலங்கோலமாயின.
நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் புதுச்சேரியில் இருந்து 90 கி.மீ தொலைவில் நிலை கொண்டு நகர தொடங்கியது. நேற்று அதிகாலை 4 மணியளவில் புயல் ஆக்ரோஷமடைந்தது. காலை 6 மணியில் இருந்து 7.30 மணி வரை �தானே�, தாண்டவம் ஆடியது. பயங்கரமான இரைச்சலுடன் சூறைக் காற்று வீசியது.
கடலூர், புதுச்சேரியில் தாண்டவமாடியது தானே
நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் புதுச்சேரியில் இருந்து 90 கி.மீ தொலைவில் நிலை கொண்டு நகர தொடங்கியது. நேற்று அதிகாலை 4 மணியளவில் புயல் ஆக்ரோஷமடைந்தது. காலை 6 மணியில் இருந்து 7.30 மணி வரை �தானே�, தாண்டவம் ஆடியது. பயங்கரமான இரைச்சலுடன் சூறைக் காற்று வீசியது.
தென்னை மரங்கள், மின் கம்பங்கள் தலை திருகினாற் போல் திருகி விழுந்தது. கூரை வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. பெரிய விளம்பர நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர்கள் மற்றும் கடைகளின் முன் வைக்கப்பட்டிருந்து பேனர்களும் புயலின் சீற்றத்துக்கு இரையாயின. சுவர்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான கூரை வீடுகள் மீது மரங்கள் விழுந்தது. மரம், சுவர் இடிந்து விழுந்தது உள்பட புயலுக்கு கடலூரில் 28 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கான பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், கம்பிகள்


வங்கக் கடலில் உருவான ‘தானே’ புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரை கடந்தது. புயலின் கோர தாண்டவத்தில் புதுச்சேரியும் கடலூரும் நிலைகுலைந்து போய்விட்டன. புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே தடுப்புக் கற்களையும் தாண்டி எழுந்த ஆவேச அலைகள், அங்கிருந்த கடைகள், ஸ்டால்களை புரட்டிப் போட்டுவிட்டன. சேதமடைந்தன. சுமார்
5 ஆயிரம் கோடி பொருட்கள் சேதமடைந்துள்ளன. மின்விநியோகம் சீராக குறைந்தது 15 நாள் ஆகும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போக்குவரத்து துண்டிப்பு:
தானே புயலால் சென்னை&புதுச்சேரி இசிஆர் சாலை மற்றும் புதுவை&சிதம்பரம் சாலைகளின் இருபுறமும் உள்ள மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன.
இதனால் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி, சிதம்பரம், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் போக்குவரத்து துண்டிப் பானது. இதுபோன்று விருத்தாசலம், வடலூர், திட்டக்குடி உள்ளிட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகரங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பானது.
புதுச்சேரியில் 7 பேர் பலி:
தானே புயல் புதுவை மாநிலத்தையும் நிலைக்குலைய செய்தது. புயலுக்கு 7 பேர் இறந்தனர். புதுச்சேரியில் கடற்கரை சாலை நாசமானது. அதுபோல, சூறைக் காற்றில், முக்கிய வீதிகள் பல சின்னாபின்னமாயின. விளம்பர போர்டுகள்,கூரைகள் எல்லாம் பிய்த்தெறியப்பட்டன.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் �தானே� புயலாக மாறி நேற்று காலை கடலூர்& புதுச்சேரி இடையே கரையை கடந்தது. கோரதாண்டவம் ஆடிய இப்புயலால் புதுச்சேரி மாநிலமே நிலை குலைந்து விட்டது. புரட்டி போட்ட கோர காட்சிகள் இங்கே.. புதுவை வீராம்பட்டினத்தில் புயலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ருத்ர தாண்டவம் ஆடிய தென்னை மரங்கள்.



கடலூர் தேவானம்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நிலை குலைந்து கிடக்கின்றன.



கடலூர் சில்வர் பீச் காவல் நிலையத்தில் இருந்த இரும்பு பீரங்கியை ரோட்டில் வீசி சென்றுள்ளது புயல்.



புதுவை வீராம்பட்டினம் கடலில் புயல் இழுத்து சென்ற படகை மீட்க சென்ற மீனவர் பலியாகி சடலமாக கிடக்கிறார்.



புதுவை காமராஜர் சாலையில் உருக்குலைந்த பெட்ரோல் பங்க்.



புதுவை காமராஜர் சாலையில் உருக்குலைந்த பெட்ரோல் பங்க்.



புதுவை கடற்கரை சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் நொறுங்கிய வேன்.



தாண்டவமாடிய ‘தானே’ புயலால் சென்னை மெரினா கொந்தளித்தது. கலங்கரை விளக்கம் அருகே மணல் பரப்பை சூழ்ந்திருக்கும் கடல்நீர்.



சென்னையில்:
சென்னை பெரம்பூரில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். அதேபோல ஆவடியில் மின்கம்பியை மிதித்த ஒருவர் பலியானார். காஞ்சிபுரத்தில் 3 பேர் மழைக்கு பலியாகினர்.