நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 1 நவம்பர், 2011

நர்கீஸ் பிறந்தார்:உலக மக்கள் தொகை 700 கோடியானது

மால்(உ.பி) : இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து உலக மக்கள் தொகை 700 கோடியானது.Peru 7 Billionth Person
உ.பி மாநிலத்தின் லக்னோவுக்கு அருகிலுள்ள பகுதியில் உள்ளூர் சுகாதார மையத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு வினீதா-அஜெய் தம்பதியினருக்கு பிறந்த பெண்குழந்தை உலக மக்கள் தொகையான 700 கோடியை எட்டியதாக அரசு சாரா நிறுவனமான ப்ளான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பாக்கியஸ்வரி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் மணிலா அரசு மருத்துவமனையிலும் இதே நேரத்தில் குழந்தை பிறந்தது.உலக மக்கள்தொகை 700 கோடியை எட்டிய வேளையில் உலகம் எதிர்கொள்ளும் பருவநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையுடன் முன்னேறவேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக மக்கள் இன்று 700 கோடி மடங்கு வலுவானவர்கள் எனவும், பரஸ்பர மதிப்பு மற்றும் ஒத்துழைப்பு மூலம் சமூகத்திற்கு பயனளிக்கும் விதத்தில் குழந்தைகளை வளர்த்த இயலவேண்டும் என மூன் மேலும் தெரிவித்துள்ளார்.