நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 4 நவம்பர், 2011

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது


சென்னை : வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை மையமாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டி யல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டு, குறிப்பிடப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பொது மக்களின் பார்வைக் காக வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது, விலாச ம் மாற்றம் செய்து, நீக்கம் செய்யலாம். இதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்கள் வரும் 8ம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். ஆண்&பெண் அல்லாத �பிறர்� பிரிவின ரும் வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவார் கள். அவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும்.
பெயர் சேர்ப்பு உள் ளிட்ட படிவங்களை பெறுவதற்காக, நாளை காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை �சிறப்பு முகாம்� நடத்தப்படுகிறது. இந்த முகாம்கள், சட்டப் பேரவைத் தேர்தலின் போது வாக்களித்த குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் மட்டும் நடக்கிறது. இந்த தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
ஜன.5ல் இறுதி பட்டியல்
படிவங்களை
சமர்ப்பிப்பது எப்படி?
புதிதாக பெயர் சேர்க்க படிவம்&6 ஐ பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு போட்டோவை இணைத்து கொடுக்க வேண்டும். இத்துடன் ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட், டெலிபோன் பில், மின் கட்டணம் செலுத்தும் அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைக்க வேண்டும்.
25 வயதுக்குட்பட்டவர்கள் வயதை உறுதி செய்வதற்கான சான்றை கொண்டு வரவேண்டும்.
இறந்தவர்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய படிவம்&7ஐ கொடுக்க வேண்டும். இத்துடன் இறப்பு சான்றிதழ் இணைக்க வேண்டும்.
பெயர், உறவு, வயது ஆகியவை மாறியிருந்தால் அவற்றை திருத்தம் செய்ய படிவம்&8ஐ பயன்படுத்த வேண்டும். இத்துடன் அதற்குரிய ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
பட்டியலில் உள்ள பெயரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய படிவம்& �8ஏ�வை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
1.1.2012ம் ஆண்டு மைய மாக வைத்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்&6 கொடுக்கும் போது, அத்துடன் பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி சான்றிதழ் இணைக்க வேண்டும்.