நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 1 நவம்பர், 2011

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்திற்கு எதிரான மக்கள் உணர்வு:ஃபாரூக் அப்துல்லா

9222636_origஸ்ரீநகர் : ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை(AFSPA) வாபஸ் பெறுவதற்கு ஆதரவாக நாடு முழுவதும் பெருமளவிலான பொதுமக்களின் கருத்து உருவாகியுள்ளதாக மத்திய எரிசக்தி துறை அமைச்சரும், ஜம்மு-கஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபாரூக் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீநகரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது ஃபாரூக் அப்துல்லாஹ் இதனை தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது:ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து மாநில அரசும், ராணுவம் ஒன்றாக அமர்ந்து விவாதித்து முடிவை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
அமைதியான சூழல் நிலவும் பிரதேசங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் தேவையில்லை. ஆனால், பிரச்சனைக்குரிய பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் தொடரவேண்டும். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் தொடர்பாக முடிவை மேற்கொள்ளும் வேளையில் கஷ்மீர் மத்தியஸ்த குழுவின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, கஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை வாபஸ் பெறுவதற்கான முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் முயற்சியில் எவ்வித தவறுமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக கூடுதல் ஆலோசனைகள் தேவை என்ற மாநில காங்கிரஸ் தலைவர்களின் கருத்து முற்றிலும் சாதாரணமானது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.