நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 2 நவம்பர், 2011

வன்முறையை கட்டுப்படுத்தி, பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; மத்திய, மாநில அரசுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட்வேண்டுகோள்



இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீபகாலமாக நடந்து வரும் மதரீதியாக மற்றும் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுமுஸ்லிம்கள், இதர மதரீதியான சிறுபான்னமையினரின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் வழங்கவேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு டெல்லியில்நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களாக முஸ்லிம் சமூகத்திற்கெதிரான வன்முறைகள் குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்தர்கண்ட், மத்திய பிரதேசம் மற்றும்ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. சில மாநிலங்களில் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர் ஆனை அவமதிக்கும் சம்பவங்களும்நடைபெற்றது. இதில் பெரும்பாலான சம்பவங்களில் போலீஸ் துறை வன்முறையாளர்களோடு கை கோர்த்துக் கொண்டு நாங்கள் சிறுபான்மை மக்களுக்குஎதிராகத்தான் செயல்படுவோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

வரவிருக்கின்ற பாராளுமன்ற மற்றும் சில மாநில சட்டமன்ற தேர்தல்களை மனதிற்கொண்டு மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் சதியில் ஃபாசிஸசங்பரிவார சக்திகள் ஈடுபட்டுவருகின்றன என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது.

நரேந்திர மோடியின் சத்தியாகிரக நாடகம், அதைத் தொடர்ந்து அத்வானியின் ரதயாத்திரை மேலும் சில ஊழல் எதிர்ப்பு இயக்கங்களில் ஊடுறுவியுள்ளஆர்.எஸ்.எஸ். காரர்கள் போன்ற அனைத்துமே மேற்குறிப்பிட்ட அரசியல் நாடகத்தின் பகுதிகள்தான்.

காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொள்பவர்கள் ஃபாசிஸ்டுகளால் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு விடப்பட்டுள்ளசவாலை துணிவுடன் எதிர்கொள்ளவில்லை என்பதுதான் இதில் கவலைக்குரிய விஷயமாகும்.

மேலும் சிறுபான்மையினர் தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் கலவரம் மற்றும் வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டுமெனில், சிறுபான்மையினர்அவர்களின் மனித உரிமைகள், சமூக நீதி மற்றும் சமூகத்தை சக்திபடுத்துதல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்த ஜனநாயக நீதியான முயற்சிகள் மற்றும்போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் சந்திப்பில் நாட்டில் நடைபெற்ற 16 குண்டு வெடிப்புகளுக்கு பின்னணியில் இருப்பது இந்துத்துவ ஃபாசிஸபயங்கரவாதிகள்தான் என்ற மிகவும் ஆபத்தான அறிவிப்பு குறித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு தன்னுடைய கவலையை பதிவு செய்தது.

நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் இருப்பது சங்பரிவார இந்துத்துவ ஃபாசிஸ சக்திகள்தான் என்பது மீண்டும், மீண்டும்வெளிச்சத்திற்கு வந்த பின்பும் மத்திய, மாநில அரசுகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கையும், அமைதியையும் கடைபிடித்துவருகின்றன. இனியாவது உளவுத்துறை நிறுனங்கள் இந்துத்துவ ஃபாசிஸ அமைப்புகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.

விசாரணை என்ற பெயரில் மீண்டும், மீண்டும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்.

விசாரணை என்ற பெயரில் சிறுபான்மையினர் குறிவைக்கப்பட மாட்டார்கள் என்ற பிரதமரின் வாக்குறுதி உடனடியாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று 1992ல் இருந்து நாட்டில் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் பாப்புலர்ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கேட்டுக்கொண்டது.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் நவம்பர் 26,27 ஆகிய தேதிகளில் புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தவிருக்கும் “சமூக நீதி மாநாடு” தொடர்பானசெயல்திட்டங்களையும் முடிவு செய்தது.

மாநாடு தொடர்பாக நாட்டின் பல்வேறு பாகங்களில் நடந்து வரும் பிரச்சார நிகழ்ச்சிகளை மீளாய்வு செய்த தேசிய செயற்குழு நவம்பர் 26ம் தேதி“சக்திபடுத்துதலை நோக்கி” என்ற தலைப்பில் கலந்தாய்வும், “நீதிக்கான மக்களின் உரிமைகள்” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கமும் நடைபெறும் எனஅறிவித்துள்ளது.

27ம் தேதி மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் இப்பொதுக்கூட்டத்திற்கு டெல்லியைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலிருந்து மக்கள்அலைகடலென திரண்டு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று நாட்டின் நாலாபுறங்களில் இருந்தும் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள்,சமூக பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழு கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். ஷரீப்,தேசிய துணைத்தலைவர் முகம்மது அலி ஜின்னா, மௌலானா உஸ்மான் பெய்க், பேரா. பி. கோயா, முஹம்மது சஹாப்தீன், முஹம்மத் ஹாலித் ரஷாதி,யாமுகைதீன், வழ. கே.பி. முகம்மது ஷரீப், ஹாமித் முஹம்மத், இல்யாஸ் தும்பே, கரமன அஷ்ரப் மௌலவி, ஓ.எம்.ஏ. ஸலாம், முஹம்மது ரோஷன் மற்றும்ஏ.எஸ். இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.