நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 9 ஜூலை, 2011

திப்பு சுல்தான் ஆட்சியிலும் பார்ப்பன ஆதிக்கம்


கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாத அரசுகளைக் காண இயலவில்லை. இந்தியாவை அரசாண்ட இசுலாமியர் ஆட்சி நிருவாகங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்தது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த வகையில் 1760 முதல் 1800 வரை மைசூரை ஆண்ட ஐதர் அலி, அவருடைய மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் அரசு நிருவாகங்களில் பார்ப்பனர் பெற்றிருந்த ஆதிக்கத்தை இக்கட்டுரையில் காணலாம்.

வெள்ளி, 8 ஜூலை, 2011

7] புத்தியால் வெல்வது

முன்குறிப்பு: இந்த அத்தியாயத்தில் வருகிற மத குருக்கள், யூதப் பள்ளி ஆசிரியர்களின் ஓவியங்கள் எதுவும் துரதிர்ஷ்ட வசமாக இன்று நமக்குக் கிடைப்பதில்லை. யூதர்கள் தம் செயல்பாடுகளை மிக ரகசியமாக வைத்துக்கொண்ட ஒரு காலகட்டத்தைச் சித்திரிக்கும் அத்தியாயம் என்பதால் சம்பந்தப்பட்ட நபர்களின் ஓவியங்கள் எதுவும் வரையப்பட்டிருக்கவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.)

மஸதா தாக்குதலுக்கும் அழிவுக்கும் பிறகு பாலஸ்தீனின் கடற்கரையோரப் பகுதிகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட யூதர்களுக்கு, வாழ்க்கை எப்போதும் போல் பிரச்னைகள் மிக்கதாகத்தான் இருந்தது. ஆனால் அழிவுகளாலும் இழப்புகளாலும் இடமாற்றத்தாலும் அவர்கள் நிலைகுலைந்து போய்விடவில்லை.

6] பிரித்து ஆளும் சூழ்ச்சி

ஒரு கோயிலை இடிப்பதென்பது எப்பேர்ப்பட்ட சரித்திர வடு என்பது மற்ற யாரையும் விட நமக்கு மிக நன்றாகத் தெரியும். முதல் தலைமுறைக்குக் கண்ணைவிட்டு அகலாத காட்சியாகவும், எந்தத் தலைமுறைக்கும் நெஞ்சைவிட்டு நகராத சம்பவமாகவும் அப்படியே படிந்துவிடக்கூடியது அது.

யூதர்களைப் பொறுத்தவரை அப்படியரு சம்பவத்தைத் தம் வாழ்நாளில் இரண்டாவது முறையும் அவர்கள் பார்த்துவிட்டார்கள். கி.பி. 70-ம் ஆண்டு ரோமானியத் தாக்குதலுக்கு இலக்காகி, இடிக்கப்பட்ட அந்தத் தேவாலயம் இன்றுவரை மீண்டும் கட்டப்படவில்லை. இன்னொரு தேவதூதன் இறங்கிவந்து மீண்டும் அதைக் கட்டித்தருவான் என்று யூதகுலம் காத்திருக்கிறது. இடிந்த கோயிலின் ஒரு செங்கல்லைக்கூட அவர்கள் திரும்ப எடுத்து அடுக்க முயற்சி செய்யவில்லை. அப்படியே விட்டுவிட்டார்கள். 



இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு


20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது.

வியாழன், 7 ஜூலை, 2011

5] கிருஸ்துவமும் யூதர்களும்

கிறிஸ்தவ மதத்தின் எழுச்சி, யூதகுலத்துக்கு விடப்பட்ட முதல் மற்றும் மிகப்பெரிய சவால். இதில் சந்தேகமே இல்லை. கி.பி. 300-ம் ஆண்டு சிரியா, ஆசியா மைனர், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் வசித்துவந்த யூதர்களில் மிகப்பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்தார்கள். கிறிஸ்தவத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்ட ஜேம்ஸ், பால் போன்ற இயேசுவின் தோழர்கள் அக்காரணத்தாலேயே சிறைப்பிடிக்கப்பட்டதும் படுகொலை செய்யப்பட்டதும் (ஜேம்ஸை யூதர்கள் கல்லால் அடித்துக் கொன்றார்கள். பால், ரோம் நகருக்குச் சென்றபோது மன்னர் நீரோ அவரை சிறையில் அடைத்தார். அங்கேயே அவர் உயிரையும் விட்டார்.)

புதன், 6 ஜூலை, 2011

4] கி.பி.

யூதர்களின் சரித்திரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிக முக்கியமானதொரு நிகழ்ச்சி.மோஸஸுக்குப் பிறகு இன்னுமொரு தேவதூதனின் வரவு அவர்களுக்கு நியாயமாக மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், யூத குலத்தின் அடையாளமே ‘தேவதூதனுக்காகக் காத்திருக்கும் குலம்’ என்பதுதான். ஆனால் இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை.

செவ்வாய், 5 ஜூலை, 2011

3] யூதர்கள்

அது, 44வது வருடம். அதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நாற்பத்து நான்காவது வருடம். ஜெருசலேம் நகரிலிருந்த நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்திருந்தது.

நீதிமன்றம் என்றால் அரசின் நீதிமன்றம் அல்ல. அது யூத மதகுருக்களின் நீதிமன்றம். மன்னர்களைக் காட்டிலும் அன்றைக்கு அவர்களுக்குத்தான் அதிகாரம் இருந்தது. மத குருக்கள் ஒரு தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள் என்றால் மன்னரேகூட அதனை மாற்றுவது சிரமம். காரணம், மக்கள் மன்னர்களை மதித்தார்களே தவிர, மதகுருக்களைத்தான் வணக்கத்துக்குரியவர்களாக நினைத்தார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் சொல்வதுதான் தீர்ப்பு.

2] ஆப்ரஹாம் முதல்

அந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன்? அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார்.

ஆனால் அவர் மனைவிக்கு மட்டும் ஒரு யோசனை. ஒருவேளை பிரச்னை தன்னிடம்தான் இருக்குமோ? தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற காலத்தில் வருத்தத்துடன் போகவேண்டும்? தானே இன்னொரு திருமணம் செய்துவைத்துவிட்டால் என்ன என்று நினைத்தான்.

திங்கள், 4 ஜூலை, 2011

1] அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்


நிலமெல்லாம் ரத்தம் - பா.ரா 1 

ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந்து போனது உண்மை.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

சேமித்தவனின் முன்னுரை

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவருடைய ஆய்வு. தனது ஆய்வுக்கு இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களையும் விட்டுவைக்கவில்லை, விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியத்தை அறிந்துக்கொள்வதற்காக.

எழுத்துக்கள் பலவகை உண்டு. ஏன்தான் படிக்கத் தொடங்கினோமோ என்று நினைக்கக்கூடியது. மற்றொன்று தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை அவ்வெழுத்துகளோடு ஐக்கியப்படுத்திவிடுவது.

இதில் இரண்டாம் வகைதான் பா.ராகவனின் எழுத்துக்கள். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வருவதை சேமிப்பதில் எனக்கு முன்னோடி, நண்பர் கிருஸ்டோபர் ஜான் அவர்கள். அவரிடமிருந்து நானும் சேமித்து வைக்கிறேன்.

இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றிய இன்றைய பதிவுகள்தான் நாளைய வரலாறு. இது இஸ்லாம் அல்லாத ஒருவரின் ஆய்வு என்பதை மீண்டும் நினைவுப் படுத்திக்கொள்கிறேன்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
மற்றும் பா.ராகவன்
ஜான் கிரிஸ்டோஃபர்

ரமலான் மாத நிகழ்வுகள்


இது ஹிஜ்ரா காலண்டரின் 9வது மாதம்.
ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்: ஷஅபானின் இறுதி நாளில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களே, இதோ இப்பொழுது உங்கள் முன் ஒரு மாபெரும் மாதம் வருகிறது. இது அதிகமதிகம் அருள் சொரியப்பட்ட மாதம். இதில்தான் 1000 மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு அடங்கியிருக்கிறது. இந்த மாதத்தில் பகல் வேளை முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இது அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்டுள்ளது.”
ஆம்! இது நோன்பின் மாதம்
இரவு வணக்கத்தின் மாதம்
தவ்பாவின் மாதம்
தர்மத்தின் மாதம்
பொறுமையின் மாதம்
இரத்த உறவின் மாதம்
சகோதரத்துவத்தின் மாதம்
மறைஞானம் மண்ணுக்கு அருளப்பட்ட மாதம்
வெற்றியின் மாதம்
முஹம்மத் (ஸல்) அவர்கள் உருவாக்கிய குர்ஆனிய சமூகம் வரலாறு காணாத வெற்றிகளை அள்ளிக் குவித்த மாதம்.
இஸ்லாம் எழுச்சி பெற்று ஜாஹிலிய்யா சரிந்து வீழ்ந்த மாதம்.
சத்தியத்திற்கு உயிர் கொடுத்த மாதம்.
உலகை அடக்கியாண்ட அக்கிரம சக்திகளை துவம்சம் செய்து மானிட சமூகத்திற்கு விடுதலை வழங்கிய மாதம்.
வெற்றிகள்:
1. கி.பி. 610ல் விண்ணுலகில் வீற்றிருந்த குர்ஆன் மண்ணுலகம் இறக்கப்பட்டது.
2. ஹிஜ்ரி 2: பிறை 12ல் குர்ஆனை எதிர்த்து நின்று குலப் பெருமை பேசிய குறைஷிப் படையை தலைகுனியச் செய்து பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
3. ஹிஜ்ரி 5: அரபுத் தேசமே அணி திரண்டு இஸ்லாத்தைப் பூண்டோடு அழிக்க முற்பட்ட அகழ் யுத்தத்தில் எதிரிகளுக்கு மரண பயம் உண்டாக்கி, கத கலங்க வைத்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
4. ஹிஜ்ரி 8: பிறை 18ல் மக்கா வெற்றி அடைந்தது. அஞ்ஞான அரசோச்சி அரபு தேசம் ஆண்ட மக்கா மறை ஞானத்தின் மத்திய தலமாக மாறியது. அதே ஆண்டு யமன், ஈமானிய தேசமாக மாறியது. அதே ஆண்டு உஸ்ஸா என்ற சிலை உடைக்கப்பட்டது.
ஹிஜ்ரி 9: லாத் சிலை உடைக்கப்பட்டது. தாயிப் மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். அதே ஆண்டு தபூக் சென்று ரோம சாம்ராஜ்யத்தின் கதவுகள் தட்டப்பட்டன.
ஹிஜ்ரி 15: பாரசீகர்களைத் தோற்கடித்து காதிஸிய்யாவில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
ஹிஜ்ரி 21: அரேபியாவைக் கடந்து இருண்ட கண்டமாக இருந்த ஐரோப்பாவில் இஸ்லாம் கால் பதித்தது. அன்று ஸ்பெயின் உட்பட ஐரோப்பாவே சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது.
ஹிஜ்ரி 92: தாரிக் பின் ஸியாத் ரொட்ரிக் மன்னனை வெற்றி கொண்டு கிழக்கு இஸ்லாமிய சூரியன் உதித்தது.
ஹிஜ்ரி 584: ஸப்த் கோட்டையைக் கைப்பற்றி சிலுவை வீரர்களிடமிருந்து ஃபலஸ்தீனைப் பாதுகாக்கும் முயற்சியில் ஸலாஹுத்தீன் அய்யூபி வெற்றி வாகை சூடினார்கள்.
ஹிஜ்ரி 658: இஸ்லாமிய தேசமெங்கும் நாசம் விளைவித்து பாலைவனங்களை செம்மண்ணாக மாற்றிய தார்த்தாரியர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் இருப்பையே இல்லாமல் செய்த எகிப்து சுல்தான் வெற்றி வாகை சூடினார்கள்.
ஏனைய நிகழ்வுகள்:
1. ஹிஜ்ரி 3ல் பிறை 15ல் அண்ணல் நபிகளாரின் அருமைப் பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.
லைலத்துல் கத்ர் என்னும் புனித இரவில் லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும் பேழையிலிருந்து திருக்குர்ஆன் இறங்கியது.
திருமணங்கள்:
1. ஹிஜ்ரி 3ல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள்.
2. ஹிஜ்ரி 10ல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள்.
மரணங்கள்:
1. அண்ணலாரின் அருமை மனைவி கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரின் 50வது வயதில் பிறை 11ல் மரணமடைந்தார்கள்.
2. ஹிஜ்ரி 2ல் பத்ருப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அண்ணல் நபிகளாரின் அருமைப் புதல்வி ருகையா (ரலி) அவர்கள் தங்கள் 23வது வயதில் மரணமடைந்தார்கள்.
3. ஹிஜ்ரி 11ல் அண்ணலாரின் அருமைப் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் பிறை 3ல் (அண்ணலாரின் மறைவுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு) தங்கள் 29வது வயதில் மரணமடைந்தார்கள்.
4. ஹிஜ்ரி 32ல் பிறை 12ல் அண்ணலாரின் மாமா அப்பாஸ் (ரலி) அவர்கள் தங்கள் 88வது வயதில் மரணமடைந்தார்கள்.
5. ஹிஜ்ரி 40ல் பிறை 27ல் நான்காவது கலீஃபா அலீ (ரலி) அவர்கள் தங்கள் 57வது வயதில் மரணமடைந்தார்கள்.
6. ஹிஜ்ரி 50ல் அண்ணலாரின் அருமை மனைவி ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தங்கள் 50வது வயதில் மரணமடைந்தார்கள்.
7. ஹிஜ்ரி 58ல் அண்ணலாரின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் 65வது வயதில் மரணமடைந்தார்கள்.