நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 18 ஜூலை, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் அளித்த புகாரில் ப்ரஸ் கவுன்சில் நடவடிக்கை! - ஐ.பி, என். ஐ.ஏவுக்கு நோட்டீஸ்!



 நற்பெயரை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து 10 நாளிதழ்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் ஐ.பி மற்றும் என்.ஐ.ஏவுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.நேற்று டெல்லியில் நடந்த அமர்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் வாதம் கேட்டபிறகு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

தாங்கள் செய்தி வெளியிட்டது ஐ.பி அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் என்று சண்டே கார்டியன், டெக்கான் க்ரோனிக்கிள் ஆகிய பத்திரிகைகளும், என்.ஐ.ஏவிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதாக பயனீர் பத்திரிகையும் விளக்கம் அளித்ததை தொடர்ந்து மத்திய புலனாய்வு ஏஜன்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையிலான ப்ரஸ் கவுன்சில் உத்தரவிட்டது. ஐந்து பத்திரிகைகளுக்கு எதிரான புகாரில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஆதரவான தீர்மானத்தை ப்ரஸ் கவுன்சில் எடுத்தது.எதிர்காலத்தில் இத்தகைய செய்திகளை வெளியிடக்கூடாது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ், இன்குலாப்(உருது), தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், நவபாரத் டைம்ஸ்(ஹிந்தி), ஏசியன் ஏஜ் ஆகிய பத்திரிகைகளுக்கு எதிரான புகாரில் தீர்ப்பளித்து ப்ரஸ் கவுன்சில் உத்தரவிட்டது.

கடையநல்லூர் மசூத் கொலை வழக்கு: எஸ்.பி ஈஸ்வரன் பதவியிறக்கம்!


நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி விசாரணைக்காக கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கீரிப்பாறை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.


கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்கிற்காக போராடி வருகின்றது மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO). என்.சி.ஹெச்.ஆர்.ஓ. வின் களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தினால், இக்கொலையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பிரதாப் சிங், டி.எஸ்.பி.கள் ஈஸ்வரன், சந்திரபால் உள்ளிட்ட பன்னிரெண்டு காவல்துறை அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி கொலை வழக்கு பதிவு செய்து, திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்டின் பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ) பிரச்சாரம் நிறைவுற்றது



நாடு முழுவதும் மூன்று மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெற்றிகரமாக நடத்திய பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ) பிரச்சாரம் நிறைவுற்றது. புதுமையான முறையில் அதிக மக்களை சென்றடையும் விதத்தில் நடத்தப்பட்ட இந்த பிரச்சாரம் மாணவர்கள் மற்றும் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது.




முன்னதாக செங்கோட்டையில் ஆரம்பம் ஆன  ஸ்கூல் சலோ பேரணி

ஏப்ரல் 25 அன்று டெல்லி செங்கோட்டையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட கண்கவர் பேரணியுடன் இந்த பிரச்சாரம் ஆரம்பமானது. கல்வி கணக்கெடுப்பு, பள்ளிக்கூட சாதனங்கள் வழங்குதல், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தலைசிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், படிப்பை விட்ட மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் ஆகியன இந்த பிரச்சாரத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக இருந்தன.

குஜராத் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் மோடியின் பேச்சு: பாப்புலர் ஃப்ராண்ட் கண்டனம்!


முஸ்லிம் இனப்படுகொலை புகழ் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வெளிநாட்டு செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸுக்கு அளித்த நேர்காணலில் குஜராத்தில் முஸ்லிம்களை படுகொலை செய்ததை நியாயப்படுத்தியிருக்கின்றார். நரேந்திர மோடியின் இக்கருத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெவித்துள்ளது.


இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கடந்த 2002 ஆம் ஆண்டில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த கலவரத்தை கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ குஜராத முதல்வர் நரேந்திர மோடி எவ்வித முயற்சி எதுவும் எடுக்கவில்லை, மாறாக காவல் துறை அதிகாரிகளுக்கு "ஹிந்துக்களின் கோபத்தை வெளிப்படுத்த விடுங்கள்" என்று ஆணை பிறப்பித்து படுகொலை நடத்த ஊக்கப்படுத்தினார்.