NOV 2013
சனி, 24 செப்டம்பர், 2011
ஒரிசாவில் கடும் வெள்ளம்: மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை
ஒரிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டம் பனிகோய்லி கிராமத்தைச் சூழ்ந்த வெள்ளத்தில் கால்நடைகளுடன் நடந்து செல்லும் கிராம மக்கள். நாள்: சனிக்கிழமை.
புதுதில்லி : ஒரிசா வெள்ளச் சேத மீட்பு பணிகளுக்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி உள்ளது.
ஒரிசாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல நகரங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் விரைவில் சட்டப் பிரிவு: தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா
நீதிபதி பஷீர் அகமது சையது பெண்கள் (எஸ்.ஐ.டி) கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற தேசிய சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபிபு
சென்னை : தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் விரைவில் சட்டப்பிரிவு தொடங்கப்படும் என்று அதன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா கூறினார்.
கடையநல்லூர் ஊராட்சி வார்டுகளுக்கான தேர்தல் அலுவலர்கள் நியமனம்
கடையநல்லூர் :- கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 12 ஒன்றிய வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்களின் வேட்பு மனுக்களைப் பெற தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கீழ்க்கண்ட அலுவலர்களிடம் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக ஆந்திரா உளவுத்துறையின் விஷமத்தனம்
ஐதராபாத்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல, இருந்த போதிலும் அரசாங்கமும் அதன் உளவு நிறுவனங்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தை போலவே கருதுகின்றனர். மேலும் பாப்புலர் ஃப்ரண்டை எப்படியாயினும் தடை செய்துவிட வேண்டும் என்றே கங்கனம் கட்டிக்கொண்டு திரிகின்றனர்.
9/11 தாக்குதல் அமெரிக்காவின் சொந்த சூழ்ச்சித் திட்டம் – ஐ.நா சபையில் ஈரான் அதிபர் ஆவேசப் பேச்சு
நியூயார்க்: ஐ.நா பொது சபையில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஈரான் அதிபர் முஹம்மத் அஹமத் நஜாத் ஆவேசமாக பேசினார்.
ஒசாமா பின்லாடனை கொன்று, அவர் உடலை கடலில் எறிந்த செயலை
கடுமையாக விமர்சித்த அவர், அது செப்-11 தாக்குதல் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்களை மூடி மறைப்பதற்க்காகத்தான் செய்யபட்டது என்றும் கூறினார்.
பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னால் வெளிநாட்டை சேர்ந்த வலது சாரி நிறுவனம் -சி.பி.ஐ
புதுடெல்லி: 1992-ல் நடைபெற்ற பாபர் மஸ்ஜித் இடிப்புக்கான பணம் அனைத்தையும் வெளிநாட்டைச் சேர்ந்த வலதுசாரி நிறுவனம்
வழங்கியிருப்பதாக ஒரு புதிய அறிக்கையை சிறப்பு புலானாய்வுக் குழு(சி.பி.ஐ) கண்டறிந்ததோடு, இந்த பணம் ஹவாலா ஊடகம் வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதில் அதிக அளவில் பணம் புலங்கப்பட்டு இருப்பதாகவும் சிறப்பு புலானாய்வு குழுவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை ‘பாபர் மசூதி அழிவுக்குப் பின்னால் உள்ள மக்கள் மற்றும் நிறுவனங்கள்’ என்ற பெயரில் இந்த மாதம் உள்துறை அமைச்சகத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும், இந்த சம்பவத்திற்குப் பின்னால் பத்துக்கும் மேற்ப்பட்ட குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லிபரான் கமிஷனின் அறிக்கையை உள்துறை அமைச்சகம் சிறப்பு புலானாய்வு குழுவிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையை முன் வைத்து சிறப்பு புலனாய்வு குழுவின் டி.ஐ.ஜி. நீர்ஜா கோத்ரு, அமலாக்க இயக்குனர்கள் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் உறுதுணையுடன் இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தை பற்றி விசாராணை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.
உற்சாகத்தை உறிஞ்சும் ‘கொர் கொர்’!
நாள் முழுவதும் உழைத்துக் களைத்தபின் உடல் எடுக்கும் ஓய்வே உறக்கம். ஒருசிலர் உடலை கீழே சாய்த்த உடன் உறங்கிவிடுவார்கள். ஒரு சிலருக்கு எளிதில் தூக்கம் வராது. அப்படியே தூங்கினாலும் அவர்களை அவ்வளவு எளிதில் எழுப்ப முடியாது. சிலர் அடித்து போட்டது போல் உறங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர். குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம்.
முஸ்லிம் என்பதற்காக பள்ளி மாணவனைத் தாக்கிய ஆஸி. இனவெறியர்கள்
சிட்னி: தான் ஒரு முஸ்லிம் என்பதற்காக உடன் பயிலும் சக மாணவர்கள் 20 பேர் தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கினர் என்று சிட்னி பள்ளி மாணவன் ஹமித் மாமோசாய் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர் ஹமித் மாமோசாய் (15). அவரை அதே பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர் ஹமித் மாமோசாய் (15). அவரை அதே பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
பூமியை நோக்கி விழும் செயற்கைக்கோளின் வேகம் குறைந்தது.. இன்று விழும்!
வாஷிங்டன் : கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா அனுப்பிய செயற்கைக்கோள் துண்டு, துண்டாக நேற்றி பூமியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் வீழ்ச்சி வேகம் குறைந்துவிட்டதால் இன்று விழவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு
மதுரை : தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கடும் கட்டுபாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கடும் கட்டுபாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
'தனியே தனந்தனியே'...உள்ளாட்சித் தேர்தலில் '8 பிளஸ்' முனைப் போட்டி!
சென்னை : தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், முதன்முறையாக அனைத்து முக்கியக் கட்சிகளும் தனித் தனியே தேர்தலை சந்திக்கவுள்ளன. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.
திமுகவும் அதிமுகவுக்கும் மாறி மாறி காங்கிரஸ் கட்சியுடனும் பாமகவுடனும் கூட்டணி வைப்பது வாடிக்கை. காங்கிரசுக்கு வாடிக்கையே இன்னொரு கட்சியின் மீது ஏறி சவாரி செய்வது தான். பாமகவின் வாடிக்கை தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவது.
திமுகவும் அதிமுகவுக்கும் மாறி மாறி காங்கிரஸ் கட்சியுடனும் பாமகவுடனும் கூட்டணி வைப்பது வாடிக்கை. காங்கிரசுக்கு வாடிக்கையே இன்னொரு கட்சியின் மீது ஏறி சவாரி செய்வது தான். பாமகவின் வாடிக்கை தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவது.
பரமக்குடி சம்பவம் : உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகள்
பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறு தலித்கள் சமீபத்தில் கொல்லப்பட்டனர். பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்செய்தி பற்றி பல்வேறு தரப்பினர் பலவாறு தங்களுக்கு சாதகமான முறையில் திரித்து வெளியிட்ட நிலையில் செய்தியின் உண்மை நிலவரம் என்ன என்பதை வழக்கறிஞர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு நேரிடையாக சென்று பல்வேறு தரப்பினரின் வாதங்களையும் ஆதாரங்களையும் ஒப்பிட்டு அதன் மூல காரணத்தை சரியாக கணித்து வரும் காலங்களில் இத்தகைய அசம்பாவிதங்களை தவிர்பதற்காக அரசாங்கத்திற்கு ஒரு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
வியாழன், 22 செப்டம்பர், 2011
சவுதி ஆரேபியாவில் இருந்து 117 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்:விசா காலம் முடிந்ததால் நடவடிக்கை
உத்திரபிரதேசம், பீகார், உத்தராஞ்சல், ஜார்க்கண்ட் உள்பட வடமாநிலங்களில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் சவுதி அரேபியாவிற்கு டிரைவர், வெல்டர், கட்டிட பணிகளுக்கு ஏஜென்டுகள் மூலம் தலா ரூ.50 ஆயிரம் பெற்று ஆட்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் வேலைக்கான விசா இல்லாமல் சுற்றுலா விசாவில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.மேலும் அங்கு அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை.
மரண தண்டனையை எதிர்த்து மனு : கசாப்புக்காக வாதாட வக்கீல் நியமனம் !
மும்பை : தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையின் போது, அவனுக்காக வாதாட பிரபல மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தொடங்கி 3 நாட்களாக பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் மும்பையில் பயங்கர தாக்குதல் நடத்தியதில் போலீஸ் அதிகாரிகள், வெளிநாட்டவர் ஆகியோர் உட்பட 164 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளை எதிர்த்து கடற்படையை சேர்ந்த அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
ஃபலஸ்தீனின் பழ மரங்களை துண்டித்தும், விவசாய நிலங்களை எரித்தும் இஸ்ரேலியர்கள் அட்டூழியம்
மேற்குகரை ஃபலஸ்தீன் தலைவர்கள், ஐ.நா சபையில் பங்கெடுப்பதற்க்காக அமெரிக்காவிற்கு பயணிக்கும் நேரத்தில் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் பாலஸ்தீனின் மேற்குகரை (வெஸ்ட்பேங்க்) என்னுமிடத்தில் உள்ள விளை பயிர் மற்றும் பழ மரங்களை எரித்து நாசப்படுத்தினர்.
மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்...
கோழிக்கோடு : அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்காக என்று கூறி உண்ணாவிரதம் இருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செயல் ஒரு அரசியல் நாடகம் என்று பிரபல நடன கலைஞரும் சமூக ஆர்வலருமான பத்மஸ்ரீ டாக்டர் மல்லிகா சாராபாய் கூறியுள்ளார்.
‘அது நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம். சமாதானம் அமைதியை குறித்து இப்போது பேசுவதற்கு மோடிக்கு எவ்வித தகுதியுமில்லை.
புதன், 21 செப்டம்பர், 2011
தேனியில் பாப்புலர் .ப்ரண்டின் மாநில தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.
தேனி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர்கள் மாநாடு கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் தேனியில் வைத்து நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவர் சகோதரர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநிலம், மாவட்டம், வட்டம் மற்றும் கிளைத்தலைவர்கள் என நூற்றுக்கணக்கான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
17ஆம் தேதி காலை சரியாக 10 மணி அளவில் மர்ஹீம் ஆசிரியர் ஹிதாயத்துல்லாஹ் திடலில் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் கொடியேற்றி இம்மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில பொதுச்செயலாலர் சகோதரர் ஹாலித் முஹம்மது அவர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாநில துணைத்தலைவரும், விடியல் வெள்ளி மாத இதழின் ஆசிரியருமான எம். முஹம்மது இஸ்மாயில் அவர்கள் புகைப்பட கண்காட்சியை துவக்கிவைத்தார். இந்த கண்காட்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகளை விவரிக்கும் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
வரலாறு புகட்டும் பாடம்
உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.
கடையநல்லூர் தமிழை அறிந்து கொள்ளுங்கள்
கடையநல்லூர் வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் தமிழ் மற்ற ஊர்களிலிருந்தும் மிகவும் வித்தியாசப்படும். நமதூரில் அனைத்து சமுதாய மக்களும் சகோதர பாசத்துடன் ஒன்றோடோன்று இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகள் வித்தியாசப்படும்.
இவ்வளவு ஏன் முஸ்லிம்களிடையே தெருவில் வசிக்கும் மக்களும், பேட்டையில் வசிக்கும் மக்களும் பயன்படுத்தும் வார்த்தைகள் சில இடங்களில் வேறுபடும்.
ஆகவே நமதுரின் தனித்தன்மையான வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கவே இந்த சிறு முயற்சி.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் அக்டோபர் 17, 19ல் வாக்குப்பதிவு
சென்னை :- உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறுகிறது. இன்று முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திருச்சி மாநகராட்சியில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. அதே போல், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்கப்பட்டு புதிய பிரதிநிதிகள் பதவி ஏற்க வேண்டும்.
திருச்சி இடைத் தேர்தல்: பரஞ்சோதி வேட்பு மனுத் தாக்கல்-அதிமுகவுக்கு கிடைக்குமா முஸ்லீம்கள் ஓட்டு?
திருச்சி: திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் மிக எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவுக்கு போட்டி கடுமையாகியுள்ளது.
இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரான மரியம் பிச்சை விபத்தில் பலியானதால் இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த இடத்துக்கு தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை, குறிப்பாக மரியம் பிச்சையின் மகனைத் தான் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்துவார் என அந்தக் குடும்பத்தினர் எதிர்பார்த்தனர்.
வாக்காளர் பட்டியலை PDF Farmat - ல் பார்க்க தொகுதியை தேர்வு செய்யவும்
Select Your Constituency to view Electoral Rolls in PDF format | |
1. ñ£õì¢ìñ¢ Choose District | |
2. ªî£°î¤ Choose Constituency | |
Link :- http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp
நெல்லை மாவட்டத்தில் 19.92 லட்சம் வாக்காளர்கள்ஊரக உள்ளாட்சியில் அதிக ஓட்டுப்பதிவுக்கு ரெடி
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 19.92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களை விட ஆண்கள் அதிகமாக உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் விபரமாவது:
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் விபரமாவது:
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்!
சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.
அபுதாபி தீவில் 3 கி.மீ.க்கு கோடீஸ்வரரின் பெயர்
அபுதாபி : தன் பெயரை எதிலாவது எழுத வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. மரத்தில், பஸ் சீட்டில், மலை உச்சியில்.. இப்படி பொறித்து வைப்பார்கள். அபுதாபி கோடீஸ்வரர் ஒருவர் தன் பெயரை தன் சொந்த தீவில் 3 கி.மீ. தூரத்துக்கு எழுதி வைத்திருக்கிறார்.
விஷம் போல் ஏறும் காய்கறி விலை
விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது காய்கறி விலைகள்; வீட்டு சமையல் அறையில் தயாராகும் சாம்பார் ரசத்தையும் விலை ஏற்றம் பதம் பார்த்துள்ளது.
தமிழகத்தில் ஒரு காலத்தில் நன்றாக இருந்த விவசாயம், இன்று முடங்கி போகும் அளவிற்கு மாறியுள்ளது. இதற்கு காரணம் விளைநிலங்கள் எல்லாம், வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருகின்றன.
தமிழகத்தில் ஒரு காலத்தில் நன்றாக இருந்த விவசாயம், இன்று முடங்கி போகும் அளவிற்கு மாறியுள்ளது. இதற்கு காரணம் விளைநிலங்கள் எல்லாம், வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருகின்றன.
முதல் விமானம் அக்.17ல் இயக்கம் தமிழகத்தில் இருந்து 3,818 பேர் ஹஜ் பயணம்
சென்னை : எழும்பூரில் நேற்று ‘ஹஜ் 2011’ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ஏ.முகமது ஜான் தலைமை தாங்கினார். அரசு செயாளர் சந்தானம், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயலாளர் அலாவூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
10 மாநகராட்சி, 148 நகராட்சி, 13,593 ஊராட்சிகளுக்கு தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
சென்னை : தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இரு கட்டமாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் 561 டவுன் பஞ்சாயத்துகள், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் என 13,593 ஊராட்சிகள் உள்ளன.
திங்கள், 19 செப்டம்பர், 2011
வழிகாட்டும் ஒளி விளக்காக இருங்கள்
ஒரு பெண் ஒரு குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக வழிநடத்த வேண்டுமெனில், அவள் முதலில் தன்னை சிறந்த தாரமாகவும், மதி நுட்பம் நிறைந்த தாயாகவும், அறிவூட்டும் நல் ஆசானாகவும், திட்டமிடும் ஒரு நல் அதிகாரியாகவும், பணிவுள்ள, இறைவிசுவாசமுள்ள ஒரு முன்மாதிரிப் பெண்ணாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்கான 13 ஆவணங்கள்
சென்னை :- உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்கான 13 ஆவணங்கள் எவை என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆவணங்கள் அனைத்தும் 31.12. 2009க்கு முன்னர் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
முஸ்லிம்கள் நரேந்திர மோடியை என்றும் மன்னிக்க இயலாது
லக்னோ : 2500-க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிர் இழந்தும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழும் இடத்தை இழந்தும், இன்னும் முஸ்லிம் மக்கள் தங்கள் கிரமாங்களைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டும், தங்கள் சொந்த கிராமத்திற்கும், தங்கள் சொந்த வீட்டிற்கும் வர இயலமால் மற்ற இடங்களில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட 2002-ல் நடந்த குஜராத் சம்பவத்திற்கு காரணமான மோடியை முஸ்லிம் மக்கள் என்றும் மன்னிக்க இயலாது.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் – பிரதமருக்கு மாயாவதி கடிதம்
லக்னோ : உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தன் கடிதத்தில் கூறியுள்ளதாவது; ‘முஸ்லிம்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் தரவேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேவைப்பட்டால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தர சில கூடுதல் சட்டங்களை அரசு இயற்ற வேண்டும் அதற்கு பஹுஜன் சமாஜ் கட்சி எல்லாவித ஒத்துழைப்பையும் தரும் எனவும் கூறியுள்ளார்.
குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை நரவேட்டையாடிய காவல்துறை
புதுடெல்லி : ராஜஸ்தான் பாரத்புரில் உள்ள கோபால்கர் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் கலவரம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் காவல்துறையையோ அல்லது மற்ற அரசு துறைகளையோ நம்ப முடியாமல் பீதியில் உள்ளனர்.
முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் நடந்த கலவரத்தில் போலிஸ் குஜ்ஜார்களுடன் சேர்ந்து முஸ்லிம்களை கடந்த புதன் அன்று நரவேட்டை ஆடியதால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)