நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 24 செப்டம்பர், 2011

பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக ஆந்திரா உளவுத்துறையின் விஷமத்தனம்

ஐதராபாத்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல, இருந்த போதிலும் அரசாங்கமும் அதன் உளவு நிறுவனங்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தை போலவே கருதுகின்றனர். மேலும் பாப்புலர் ஃப்ரண்டை எப்படியாயினும் தடை செய்துவிட வேண்டும் என்றே கங்கனம் கட்டிக்கொண்டு திரிகின்றனர்.


இல்லையென்றால் ஏன் ரமாலான் மாதங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் செல்வந்தர்களிடம் ஜகாத் வசூலிப்பதனை கண்காணிக்க வேண்டும் என்றும் அதனை விசாரிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட வேண்டும்?
ஆந்திர மாநிலத்தின் காவல்துறை கூடுதல் இயக்குனர் கடந்த 13 ஆகஸ்ட் 2011 அன்று மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர்களின் அலுவலகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பாப்புலர் ஃப்ரண்ட் வசூலிக்கும் ஜகாத் பற்றிய‌ தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.



Andhra Pradesh Intelligence circular


அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் ரமலான் மாதத்தில் பலரிடம் நன்கொடை வசூலிப்பதாக நம்பத்தகந்த செய்திகள் கிடைத்துள்ளது. எனவே அனைத்து காவல் துறை அதிகாரிகளும் இது பற்றிய விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என ஆணையிடுகிறேன்.
கீழ்கண்டவாறு தகவல்களை சேகரிக்க வேண்டும்.
  1. வசூலிப்பவறின் பெயர்.
  2. இது வரை வசூல் செய்யப்பட்ட மொத்த தொகை.
  3. பண உதவி செய்பவரின் பெயர் பட்டியல்
  4. வசூல் செய்யப்பட்ட பணம் வங்கியில் போடப்பட்டுள்ளதா? அல்லது தனி நபரின் கைவசம் இருக்கிறதா?
  5. எந்தெந்த காரியங்களுக்கு இந்த பணம் உபயோகப்படுத்தப்படுகிறது?
இந்த தகவல்களை சேகரித்து வருகின்ற ஆகஸ்ட் 25, 2011குள் உளவுத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருட ரமழான் மாதத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசத்தின் பெரும்பாலான பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாக இருந்தது. காரணம் கேராளாவில் பேராசிரியர் ஜோசஃபின் கைவெட்டு வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் சில உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இன்றும் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அந்த சமயத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய அவதூறு பிரச்சாரங்களை பெரும்பாலான பத்திரிக்கைகள் செய்து வந்தன. லஷ்கர்-இ-தொய்பா, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பு இருப்பதாக அவதூறு செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டது. ஆனால் கேரள அரசாங்கம் இது பற்றிய விசாரணையை மேற்கொண்டு இத்தகைய செய்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.