நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 2 மே, 2012

குடியரசு தலைவர்:முஸ்லிம் வேட்பாளருக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு!


டெல்லி குடியரசுத் தலைவராக ஒரு முஸ்லிம் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய கட்சியின் நிலை என்று கூறிய சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான கமால் பரூக்கி கூறியுள்ளார்.
முஸ்லிம் வேட்பாளருக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு!
இந்தத் தேர்தலை மத அடிப்படையில் அணுகக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கினார். குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரஹ்மான் கான், தலைமைத் தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரைஷி ஆகிய மூவரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்றார். இந்த மூவரும் திறமைசாலிகள், அவரவர் துறைகளில் முத்திரை பதித்தவர்கள் என்று பாராட்டினார்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கடையநல்லுர் மர்ம காய்ச்சல் விழிப்புணர்வு !

கடையநல்லூர் -  சில வருடங்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுப்பதற்கு என்ன வழி என்பதை துண்டு பிரசுரங்கள் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் வீடு வீடாக விழிப்புணர்வை ஏற்படுத்திய காட்சி.


கேரளா:காவியாகும் கம்யூனிசத்தின் செங்கொடி!


கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் அமைப்பின் உறுப்பினர் முஹம்மது ஃபஸல் கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கம்யூனிச வெறியர்களால் படுகொலைச் செய்யப்பட்டார். தற்பொழுது இவ்வழக்கை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்பிருப்பது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவியாகும் கம்யூனிசத்தின் செங்கொடி!
இந்நிலையில் வழக்கை ஏற்கனவே சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்பொழுது தங்களின் முக்கிய தலைவர்கள் இவ்வழக்கில் சிக்கிவிடுவார்கள் என அஞ்சி அவதூறுகளை பாசிச காவிகளை மிஞ்சும் வகையில் பரப்புரைச் செய்து வருகின்றனர்.

டெரரிஸ்டுகள் அல்ல மாவோயிஸ்டுகள்!

சென்னை: பயங்கரவாதம் என்பது தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானதொன்றாகும். காரணம் பயங்கரவாத தாக்குதல்களினால் எண்ணெற்ற உயிர் சேதங்கள், பொருட்சேதங்களும் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது என கூறலாம்.



இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டு தீவிரவாதிகளை விட கொரூரமானவர்கள் உண்டு என்றால் அது கம்யூனிஸ தீவிரவாதமான மாவோயிஸ்டுகள் தான். முக்கிய பிரமுகர்களை கடத்தி கொல்வது, காவல்துறை அதிகாரிகளை கொலை செய்வது, காவல் நிலையங்களுக்கு தீ வைப்பது, பொதுமக்கள் பயணம் செய்யும் இரயில் வண்டிகளுக்கு குண்டு வைத்து கவிழ்த்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார்கள் மாவோயிஸ்டுகள்.