நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 15 ஜூன், 2013

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு:ஐ.பியின் பங்கை கண்டுபிடித்த சி.பி.ஐ அதிகாரி சதீஷ் சர்மா நீக்கம்!

புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை சீர்குலைக்க உயர்மட்ட அளவில் தலையீடு ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் மீது வழக்கின் விசாரணை திரும்பியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சி.பி.ஐ அதிகாரி பலிகடாவாக்கப்பட்டுள்ளார். ராஜேந்தர் குமாருக்கு போலி என்கவுண்டரில் தொடர்பு இருப்பதாக தகவல் அளித்த முன்னாள் சிறப்பு புலனாய்வு குழுவின் உறுப்பினரும், தற்போது சி.பி.ஐ புலனாய்வுக் குழுவின் உதவியாளருமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவை சி.பி.ஐ புலனாய்வுக் குழுவில் இருந்து நீக்கம் செய்துள்ளது. ராஜேந்தர் குமாரை சி.பி.ஐ அழைத்து விசாரணை நடத்தியதை கண்டித்து ஐ.பி தலைவர் ஆசிஃப் இப்ராஹீம் பிரதமரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

திங்கள், 10 ஜூன், 2013

காலித் முஜாஹித், தாரிக் காஸ்மி கைது!: போலீஸின் பொய் மூட்டைகளை தோலுரித்துக் காட்டும் நிமேஷ் கமிஷன் அறிக்கை!


உத்தரபிரதேச மாநிலத்தில் 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி, காலித் முஜாஹித், தாரிக் காஸ்மி ஆகியோரை எஸ்.டி.எஃப் (ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்) கைது செய்தது.இக்கைது சம்பவத்தில் மர்மங்கள் நிறைந்திருப்பதை வெட்ட வெளிச்சமாக்கும் நிமேஷ் கமிஷனின் அறிக்கை வெளியாகியுள்ளது.காலித் முஜாஹிதையும், தாரிக் காஸ்மியையும் பொய் வழக்கில் சிக்கவைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நேற்று முன் தினம் உ.பி மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிமேஷ் கமிஷன் கூறுகிறது. நிமேஷ் கமிஷனின் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
 
ஃபைஸாபாத், லக்னோ, கோரக்பூர் ஆகிய இடங்களில் 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காஸ்மிக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டி பாரபங்கி ரெயில்வே நிலையத்தில் வைத்து கைது செய்ததாக எஸ்.டி.எஃப் கூறியது. இவர்களிடமிருந்து வெடிப்பொருட்களை கைப்பற்றியதாகவும் எஸ்.டி.எஃப் தெரிவித்தது. ஆனால், கைது செய்ததாக கூறப்படும் தேதிக்கு முன்பே இருவரையும் எஸ்.டி.எஃப் காவலில் எடுத்ததாக நிமேஷ் கமிஷன் கண்டறிந்தள்ளது.

இலக்கியச்சோலையின் புதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா



ஞாயிறு, 9 ஜூன், 2013

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய "பள்ளி செல்வோம்" (SCHOOL CHALO)




நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் சமுக மேம்பாட்டுத்துறையின் சார்பாக "பள்ளி செல்வோம்" (SCHOOL CHALO) "தேசீய விழிபுணர்வு பிரச்சாரத்தின் நிகழ்ச்சியாக 1,00,000 லட்சம் கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன் 07 அன்று  மாலை 4.30 மணிக்கு தென்காசி, காட்டு பாவா நடுநிலை பள்ளியில் வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் தென்காசி நகர தலைவர் P.  முகம்மது தாரிக் அவர்கள் தலைமையில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.