NOV 2013
சனி, 26 மே, 2012
வெள்ளி, 25 மே, 2012
எகிப்து அதிபர் தேர்தல்: இஃவான் வேட்பாளர் முர்ஸி முன்னணி!
கெய்ரோ:முப்பது ஆண்டுகள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு முடிவுக் கட்டிய மக்கள் புரட்சிக்குப் பிறகு ஜனநாயகத்தை நோக்கி நகரும் எகிப்தில் கடந்த 2 தினங்களாக நடைபெற்று வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் தேர்தலில் முதல் கட்ட முடிவுகள் இஸ்லாமியவாதிகளான இஃவானுல் முஸ்லிமீனின் வேட்பாளர் டாக்டர் முஹம்மது முர்ஸிக்கு சாதகமாக அமைந்துள்ளன.
தேர்தலில் தங்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி முன்னணி வகிப்பதாகவும், அதிபரை தேர்வுச் செய்வதற்கான அடுத்தக்கட்ட தேர்தலில் அவர் முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக்குடன் போட்டியிடுவார் என இஃவான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
சென்னை: கூடங்குளம் அணு உலை எதிர்பாளர்களுக்கு எதிராக போடப்பட்ட பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும், அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்!
இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் பெப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.
ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி எனன்தான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
வியாழன், 24 மே, 2012
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற SDPI கோரிக்கை
சென்னை:கூடங்குளம் போராட்டக்குழு மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மே25 ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கை வருமாறு
‘கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6 மாத காலமாக தன்னெழுச்சியோடு போராடி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)