NOV 2013
திங்கள், 23 செப்டம்பர், 2013
நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக திருச்சியில் நரமாமிச நரேந்திர மோடியை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்!
குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களின் மீது நடத்தப்பட்ட கலவரத்திற்கு காரணமான அம்மாநில முதல்வரும்,பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கண்டித்து நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக திருச்சியில் நேற்று (21-09-2013) மனித சங்கிலி மற்றும் கண்டன போராட்டம் நடைபெற்றது.நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் திருச்சி மாவட்ட தலைவி மெஹராஜ் பானு ஆலிமா தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் சித்திக்கா வரவேற்புரையாற்றினார்.
சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? அனைத்து இயக்க தலைவர்கள் சந்திப்பு
"அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறது தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது , நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.
புதுடெல்லியில் பாட்லா ஹவுஸ் என்கவுண்டருக்கு நீதி வேண்டி மாணவர்கள் பேரணி!
பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடந்து 5 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகம் நோக்கி பேரணி நடத்தினர்.முஸ்லிம் வேட்டையை நிறுத்துங்கள்! அரச பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்! உள்ளிட்ட முழக்கங்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.
பேரணிக்கு தலைமை வகித்த கேம்பஸ் ஃப்ரண்டின் தலைவர் அப்துல் நாஸர் கூறும்போது; ‘பாட்லா ஹவுஸ் சம்பவத்தில் சுதந்திரமான விசாரணையை நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும். சுதந்திரமான விசாரணைக்கு காங்கிரஸ் ஏன் அஞ்சுகிறது?
முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போலீசுக்கு நற்சான்றிதழ் வழங்கினாலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் இந்த என்கவுண்டரின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இவ்விவகாரத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. விசாரணை நடத்தி சந்தேகங்களை தீர்க்க வேண்டாமா? பாட்லா ஹவுஸ் சம்பவத்தில் விசாரணை நடத்தாவிட்டால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு ஒரு காரணமாக அது மாறிவிடும்.’ இவ்வாறு அப்துல் நாஸர் கூறினார்.
‘தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களை பொய்யாக சிக்க வைப்பது ஏராளமான சம்பவங்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது.’ என்று கேம்பஸ் ஃப்ரண்டின் அனீஸுஸ்ஸமான் தனது உரையில் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)