குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் திருச்சி வருகைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. மேலும் மோடியின் வருகைக்கு எதிராக தெருமுனைக் கூட்டங்கள், மனித சங்கிலி போராட்டங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
|
ம.க.இ .க வின் தொடர் பிரச்சாரம் |
பா.ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு வருகிற செப்டம்பர் 26ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் மோடி பங்கேறு உரையாற்றுகிறார். இதற்காக தமிழக பாஜக பல சிறப்பு ஏற்ப்பாடுகளை செய்து வருகிறது. மோடி கூட்டத்திற்காக ஆன்லைன் பதிவு உள்ளிட்ட பல வேலைகளை மும்முரமாக செய்துவருகிறது.இந்நிலையில் மோடியின் வருகைக்கு எதிராக தமிழகத்தில் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கி தீவிரமாக மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றன.
மோடியை எதிர்த்து ம.க.இ.க அமைப்பு தெருமுனைக் கூட்டங்கள், நாடகங்கள் மேலும் அவர்கள் திருச்சி முழுவதும் லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்களையும் விநியோகித்து அதன் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்,கேம்பஸ் ப்ரண்ட் என்ற மாணவர் அமைப்பு நடத்த இருந்த பேரணியை காவல் துறையினர் தடுத்துள்ளனர்,
நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் என்ற பெண்கள் அமைப்பு மனித சங்கலி போராட்டம் நடத்தியது .
இந்நிலையில் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஒட்டப்படும் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் மாநாட்டை சீர்குலைக்க சிலர் திட்டமிட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது; “இளந்தாமரை மாநாட்டை சீர்குலைக்க சதி நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகிறது. மாநாட்டை சீர்குலைத்து, கலவரத்தைத் தூண்டக் கூடிய இத்தகையை முயற்சிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும். என தன்து அறிக்கையில் கூறியுள்ளார் மேலும் கோவை மாவட்ட பாஜக காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடந்துள்ளது
|
கோவையில் எஸ்.டி.பி.ஐ எதிராக பா.ஜ.க கொடுத்த புகார் |
|
கோவையில் எஸ்.டி.பி.ஐ எதிராக பா.ஜ.க கொடுத்த புகார் |
|
எஸ்.டி.பி.ஐ மற்றும் ம.க.இ .க வினரால் திருச்சி முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டி |
|
நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட்யின் மனித சங்கலி போராட்டம் |
|
இந்திய தேசிய லீக் சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டி |
|
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டி |
|
NWF சார்பாக ஒட்டபட்ட சுவரொட்டி |
|
ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டி |