புதுடெல்லி : போலி என்கவுண்டரில் அப்பாவி முஸ்லிம் மாணவர்கள் கொலைச் செய்யப்பட்டு பீதி மாறாத பாட்லா ஹவுஸில் நிரபராதிகளான அப்பாவி இளைஞர்களை நள்ளிரவு ஆபரேசன் மூலம் கடத்த முயன்ற டெல்லி போலீசாரின் சதித்திட்டத்தை பொதுமக்கள் முறியடித்து ஜாமிஆ நகர் காவல் நிலையத்தில் போலீசாரை ஒப்படைத்து 25-க்கும் மேற்பட்ட இளைஞர்களை விடுவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக மாறிய இச்சம்பவத்தில் இருந்து தலை தப்புவதற்காக டெல்லி போலீஸ் தலைமை எட்டு போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.