நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

கடையநல்லூர் பகுதியில் கனமழை

கடையநல்லூர் : கடையநல்லூர் பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் கனத்த மழை பெய்தது. ஒருசில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சியுடன் மழையில் நனைந்து மகிழ்ந்தனர்.கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு மேல் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்ட நிலையில் கருமேகத்துடன் இருண்ட நிலையும் இருந்தது. 7 மணிக்கு மேல் கடையநல்லூர், இடைகால், கிருஷ்ணாபுரம், நயினாரகரம், சிவராமபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்தது. பலத்த இடி மின்னலுடன் பெய்த மழை சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்தது.

இதனிடையில் கனத்த மழைக்கு மத்தியில் திடீரென தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய துவங்கியது. இதனை கண்ட சிறுவர், சிறுமியர் மழையில் நனைந்தவாறு மகிழ்ச்சியில் இருந்தனர். சுமார் 15 நிமிடம் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில் மீண்டும் கனத்த மழை தொடர்ந்து பெய்தது. ஒன்றரை மணிநேரம் நீடித்த மழை காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும், கால்வாய்களிலும் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.