அஹ்மதாபாத் : 2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காத மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இனப்படுகொலைகள் நடந்த வேளையில் கடைகள் அழிக்கப்பட்ட 56 பேருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கடந்த ஆண்டு நீதிமன்றம் மோடி அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை நீதிமன்றத்தின் உத்தரவை மோடியின் அரசு நிறைவேற்றவில்லை. இதனை சுட்டிக்காட்டியுள்ளது நீதிமன்றம்.
குஜராத் இனப்படுகொலை வேளையில் சேதப்படுத்தப்பட்ட 600 க்கும் அதிகமான மத நிறுவனங்களுக்கு அவற்றை புனரமைக்க நிதி வழங்கவேண்டும் என்று நேற்று முன்தினம் நீதிமன்றம் மோடி அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.