நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மியன்மார்: உலக மனச்சாட்சி இறந்துவிட்டதா?


மியன்மாரில் (பர்மா) கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளும் வன்முறைகளும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஏன் பெறவில்லை என்பது ஆச்சரியமான கேள்வியாகவே உள்ளது.
Myanmar
இதுவரை சுமார் 20,000 முஸ்லிம்கள் -குழந்தைகள்,பெண்கள் உள்ளிட்டு- பதறப் பதறப் படு கொலைசெய்யப்பட்டுள்ளனர். உண்மையில்,கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் இடம்பெயர்ந்தோர் தொகை என்பவற்றை துல்லியமாக அறிய முடியாத நிலையே தொடர்கின்றது.

அஸ்ஸாம் கலவரம் - பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வீடு திரும்ப அரசு உதவ வேண்டும்!


அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலகம் வலுவான கோரிக்கையை 


முன்வைக்கின்றது. அஸ்ஸாம் மாநில அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்த கிராமத்தை விட்டு கலவரக்காரர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர். தற்போது தங்குவதற்கு இடமின்றியும், உணவு உடை என எவ்வித அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யமுடியாமலும் நிவாரண முகாமை விட்டு பல மைல் தூரம் வசித்து வருகின்றனர்


மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!


தேசவிடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.


அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

சுதந்திர போராட்ட வீரர் தளபதி திருப்பூர் மொய்தீன்


பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார்.


தளபதி மொய்தீன் அவர்களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரந்துபட்டதாகும். "கொடி காத்த குமரன்" என்று இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழரின் வீரத்திற்கு இலக்கணமாக விளைந்த திருப்பூர் குமரனும், திருப்பூர் மொய்தீன் அவர்களும் ஒரே ஊரவர்கள் மட்டும் அல்ல. ஒன்றாக அரசியல் என்னும் வேள்வி குண்டத்திலே குதித்தவர்கள். அந்நிய நாட்டு துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு இருவரும் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்தார்கள். இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக கிளைத்த ரயில் வண்டி மறியலிலும் இருவரும் ஒன்றாகவே செயலில் இறங்கினர்.

புனேயில் மலேகான் மாதிரி தொடர் குண்டுவெடிப்பு! – இருவர் காயம்!


புனே: மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற சுசீல்குமார் ஷிண்டேயின் வருகைக்கு சற்று முன்பு புனேயில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஏழு நிமிடங்களுக்கு இடையே நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதர 3 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் செயலிழக்கப்பட்டன.
Four explosions rock Pune
பாலகந்தர்வா திரையரங்கு, ஜங்கிலி மகாராஜா சாலையில் (ஜே.எம். சாலை) உள்ள தேனா வங்கிக் கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டொனால்ட் உணவகம் அருகிலிருக்கும் குப்பைத் தொட்டி, கார்வாரே பாலம் ஆகிய 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

செவ்வாய், 31 ஜூலை, 2012

நாகர்கோவிலில் வீடுகள் மீது கல்வீச்சு! – நள்ளிரவில் முஸ்லிம்கள் சாலை மறியல்!


நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இடலாக்குடி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர் ஆகும். இடலாக்குடியில் ஆஸாத் கார்டன் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில் நேற்று சில மர்ம நபர்கள் முஸ்லிம் ஆண்கள் ரமலான் இரவு சிறப்புத் தொழுகைக்கு(தராவீஹ்) சென்ற வேளையில் வீடுகள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ஷேக் மன்சூர், அஹ்மத் கான், நூர்ஜஹான் ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி முஸ்லிம்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டம்2
இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் வாழும்  ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நள்ளிரவு 11 மணி அளவில் திரண்டு வந்து நாகர்கோவில்-கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அஸ்ஸாம் மக்களுக்காக உதவுங்களேன்...!


அஸ்ஸாம் மக்கள் மீண்டும் உங்களின் உதவியை எதிர்பார்கிறார்கள். 
அரசு தரப்பு டி.ஜி.பி  ஜே.என். செளத்ரியின் அறிக்கை படி அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் மொத்தம் 3,78,045 மக்கள் (முஸ்லிம்கள் 2,66,700, பெளத்தர்கள் 1,11,345) வீடுகளை இழந்து அநாதைகளாக ஆகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உயிர்களை இழந்துள்ளனர்.
அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களின் விபரம் வருமாறு:

திங்கள், 30 ஜூலை, 2012

இந்திய குடிமக்களை வங்காளதேச குடியேற்றக்காரர்களாக சித்தரிக்க முயற்சி! – எஸ்.டி.பி.ஐ


புதுடெல்லி : அஸ்ஸாம், உ.பி மாநிலங்களில் வெடித்து கிளம்பிய கலவரங்கள் குறித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்டுள்ளது. வகுப்புவாத கலவரங்களை குறித்து விசாரணை நடத்த நீதி விசாரணை கமிஷனை நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ தேசியதலைவர் இ.அபூபக்கர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இ.அபூபக்கர்
இதுத்தொடர்பாக இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ‘இரு கலவரங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் ஆவர். மாநில அரசு கற்பனை எண்ணத்தை கைவிட்டு நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக அமைப்பைச்சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜமாத் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிற இயக்க தலைவர்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்து அதன் மூலமாக சமூகத்திற்கு பயன் தரக்கூடிய செயல்களை ஒன்றினைந்து செயல்படுத்துவதற்காக ஒரு தலைப்பின் கீழ் விவாதம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இவ்வருடமும் நேற்றைய தினம் அண்ணா சாலையிலுள்ள வெல்லிங்டன் பிளாசாவில் வைத்து நடைபெற்றது.



அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!


அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

                           அஸ்ஸலாமு அலைக்கும்!

இறையருள் அதிகம் பெருவதற்காகவும், நன்மைகளை அள்ளிக்கொள்வதற்காவும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனித மிகு ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்றோம். இந்த சிறப்பான தருணத்தில் ஒரு சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன்.

இன்றைய காலகட்டத்தில் அரபு உலகம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக ஜனநாயகம் அமைந்துள்ளது என்பதை  எவறாலும் மருக்கவியலாது. இன்றைய காலகட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடும் தன்மை எல்லா நேரங்களிலும் வெற்றியை அளிப்பதில்லை என்பதை சமீபத்திய‌ நாட்களில் நிறைய உதாரணங்களை நம்மால் காண முடியும். 

ஞாயிறு, 29 ஜூலை, 2012

மங்களூர் ரிசார்ட் பார்டியில் சங்க்பரிவார் தாக்குதல்!


மங்களூர் : 3 ஆண்டுகளுக்கு முன்பு மங்களூரில் பப்கள் மீது நடத்திய தாக்குதலைப் போன்றதொரு சம்பவம் மீண்டும் அங்கு அரங்கேறியுள்ளது.
Hindu Jagarana Vedike raids resort, attack girls in Mangalore
கர்நாடக மாநிலம் மங்களூரின் புறநகர் பகுதியான பாடிலுவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று இரவு மது விருந்து நடந்தது. அதில் அரை குறை ஆடையணிந்த இளம் பெண்களும், வாலிபர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்து நடப்பது பற்றி தகவல் அறிந்த இந்து ஜகரன் வேதிகே அமைப்பைச் சேர்ந்த 50 பேர் அந்த ரிசார்டுக்குள் புகுந்து அங்கிருந்த இளம் பெண்களையும், வாலிபர்களையும் ஓட, ஓட அடித்து உதைத்தனர். இதில் 2 பெண்களும், பல வாலிபர்களும் காயம் அடைந்தனர்.