நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 30 ஜூலை, 2012

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!


அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

                           அஸ்ஸலாமு அலைக்கும்!

இறையருள் அதிகம் பெருவதற்காகவும், நன்மைகளை அள்ளிக்கொள்வதற்காவும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனித மிகு ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்றோம். இந்த சிறப்பான தருணத்தில் ஒரு சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன்.

இன்றைய காலகட்டத்தில் அரபு உலகம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக ஜனநாயகம் அமைந்துள்ளது என்பதை  எவறாலும் மருக்கவியலாது. இன்றைய காலகட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடும் தன்மை எல்லா நேரங்களிலும் வெற்றியை அளிப்பதில்லை என்பதை சமீபத்திய‌ நாட்களில் நிறைய உதாரணங்களை நம்மால் காண முடியும். 
உலக புகழ்பெற்ற மார்க்க அறிஞரான டாக்டர். யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள் கூறும் போது முஸ்லிம்கள் ஜனநாயகத்தை தங்களின் புதிய ஆயுதமாக கையில் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இருக்கும் இந்திய முஸ்லிம்களை வலிமைப்படுத்தவும், சுதந்திரம், நீதி மற்றும் பாதுகாப்பு என்ற நிலை எல்லா மக்களுக்கும் சமமான முறையில் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் துவங்கப்பட்டு இதே ஜனநாயகத்தை ஆயுதமாக கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது. நீதி மறுக்கப்பட்டு நிர்கதியாக இருக்கும் முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றுவதற்காக எந்நேரத்திலும் தயார இருக்க வேண்டியது அவசியமாகும்.

சமீபத்தில் சென்னை மைலாப்பூரில் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் சில ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுக்கென்று வீடுகளை அமைத்துக்கொண்டிருந்திருக்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் நிலங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் வக்ஃப் வாரியம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் ஆக்கிரமிப்பாளர்கள் அவ்விடத்தை காலி செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்திடமிருந்து ஆணை கிடைத்தபோதும் ஆக்கிரமிப்பாளர்களை அப்பகுதியிலிருந்து காலி செய்ய முடியவில்லை காரணம் பெரும் அரசியல் கட்சியின் தலைவர்கள் பின்னால் இருந்து செயல்பட்டு கொண்டிருந்திருக்கின்றார்கள். பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் அப்பகுதிக்குச் சென்று மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஆக்கிரமிப்பளர்களை அப்புறப்படுத்தி இடத்தை வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைத்தார்கள். 

இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தை தலை நிமிர்ந்து வாழவைப்பதற்காக ஒரு சக்தி அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்பேற்பட்ட சக்தியை தேச முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகளில் சில:

1. முஸ்லிம்களின் உரிமை மற்றும் நீதிக்காக போராடுவது.
2. சட்டரீதியாகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடுவது
3. கல்வி மற்றும் சுய வேலைவாய்ப்பு மூலமாக முஸ்லிம் சமூகத்தை மேம்படுத்துதல்
4. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
5. அரசியல் களம்
6. இஸ்லாமிய அழைப்பு பணிகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இத்தகைய செயல்பாடுகள் எண்ணற்ற மாணவர்களையும், பெண்களையும், உலமாக்களையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வரும் சமூகப்பணிகளிலு உங்களையும் நீங்கள் இணைத்துக்கொள்ளவே பெரிதும் விரும்புகின்றோம். உங்களால் இயன்ற அளவு பொருளாதார உதவிகளை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.