அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலகம் வலுவான கோரிக்கையை
ஆனால் உண்மை நிலையை பார்க்கும் போது நிலமை இதைவிட மோசமாக இருப்பதையே காட்டுகிறது. அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்கள் போதுமானதாக இல்லை. மேலும் போதிய மறுவாழ்வை வழங்கிடாமல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படுவதால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை முற்றிலுமாக தீர்த்துவிட முடியாது. அஸ்ஸாமில் இதற்கு முன்னால் நடைபெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு போதிய மறுவாழ்வு உதவி கிடைக்காமல் இன்று வரை தெரு ஓரங்களிலும் ஆற்றங்கரை ஓரங்களிலும் வசித்து வரும் அவல நிலை தொடர்கிறது. எனவே துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச்செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். கலவரம் நடைபெற்ற கிராமங்களிலுள்ள வீடுகள் பெரும்பாலும் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பிடியில் இருக்கின்றன. அவை அனைத்தையும் மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் ஏற்படுத்தி தர வேண்டும்.
ஹிந்து, தெஹல்கா போன்ற பத்திரிகைகளின் செய்தி படி BTAD மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவர தாக்குதல் அனைத்தும் முன்பே திட்டமிடப்பட்டதாகவும், போடோ தீவிரவாதிகள் தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான போடா தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் பல நாட்களாக இருந்திருந்தும் மாநில அரசு மற்றும் காவல்துறையினர் அதனை பொருட்படுத்தாமல் இருந்திருக்கின்றனர். கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவும், கலவரத்தின் போதும் போடோ இனத்தலைவர்களின் பேச்சுக்கள் நமது கூற்றை உண்மைப்படுத்துகிறது. போடோ இனத்தின் பிரதேச சபை தலைவர் கம்பா போர்யோகிரி "தங்களது சொந்த வீட்டை விட்டு வெளியேறிய முஸ்லிம்கள் மீண்டும் தங்களது இடத்திற்கு வர அவர்களை அனுமதிக்க கூடாது. அவர்கள் எங்கு சென்றார்களோ அங்கேயே அவர்கள் இருந்து கொள்ள வேண்டும். அவர்கள் திரும்பி வரும் பட்சத்தில் விபரீதமான நிலமைகள் ஏற்படும்" என வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
அனைத்து போடோ மாணவ தொழிற்சங்கத்தின் தலைவர் பிரமோத் மோடோ கூறும்போது "தூப்ரி-கொக்ரஜர் மற்றும் சிராங்-கோசிகான் போன்ற எல்லைப்பகுதிகளுக்கு சீல் வைத்து எப்பகுதியிலிருந்து மக்கள் போடோ இனத்தவர் வசிக்கும் பகுதிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.(செய்தி: தி ஹிந்து)
கலவரத்திற்கு காரணமாக இருந்த இவர்களும் இதே மன நிலையுடன் செயல்பட்ட காவல்துறையினரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். அதே போன்று அஸ்ஸாம் முஸ்லிம்களை ஊடுறுவிகள், வங்காள தேசத்திலிருந்து குடியேறிவர்கள் என்று எல்.கே. அத்வானி போன்ற அரசியல்வாதிகளின் கூற்று பிரச்சனையை தீர்த்துவைப்பதாக இல்லாமல் அதனை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
அஸ்ஸாமில் சட்ட ஒழுங்கு பிரச்சனை முற்றிலுமாக சீர்குழைந்துள்ளது. தருன் கோகாயின் அரசாங்கம் இது போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் தொடர அனுமதிக்கக்கூடாது அதிலும் குறிப்பாக BTAD பகுதிகளில் சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும். காவல்துறையினரும் இதனை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்ற் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. எனவே மத்திய அரசு அஸ்ஸாம் மக்களின் நலனை கருதி தருண் கோகியின் அரசை டிஸ்மிஸ் செய்து கவர்னர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய உயர்மட்ட குழு கேட்டுக்கொள்கிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இக்கூட்டத்தில் பர்மா முஸ்லிம்களின் தொடர் அவல நிலையும் சுட்டிக்காட்டப்பட்டது. மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படும் பர்மாவை ஊடகங்கள் அனைத்தும் மறைத்து வருகின்றன. மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு மியான்மர் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி பர்மாவில் வசிக்கக்கூடிய சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உயிர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். புத்த தீவிரவாதிகளால் இதுவரை 20,000ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 90,000ற்கும் அதிகமானோர் வலுகட்டாயமாக தங்களது இடங்களை விட்டு துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் வழிபாட்டு ஸ்தலங்களும், சொத்துக்களும் தீக்கரையாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் குறிபாக ஐ நா சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் உடனடியாக தலையிட்டு மியான்மர் முஸ்லிம்கள் மீதான இக்கொடூர கொலைகளை தடுத்தி நிறுத்திட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது.
வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரையிலான ஒரு மாத காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தேசிய அளவில் மாபெரும் பிரச்சாரத்தை துவங்க இருக்கிறது. அவர்கள் மீதான தகுந்த ஆதாரங்கள் இல்லாத போதிலும் பாதுகாப்பு என்ற ஒன்றை காரணம் காட்டி அவர்கள் ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடுவது சிவில் சமூகத்தின் தலையாய கடமையாகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்கள் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அறிக்கைகளை சமர்பித்தார்.