சென்னை :- தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை WWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.
NOV 2013
சனி, 3 மார்ச், 2012
வெள்ளி, 2 மார்ச், 2012
சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
“காஷ்மீர் இந்தியாவின் கொசோவோ” என்ற கட்டுரை இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் பத்திரிகையான “சிம் செய்தி மடலில்” வெளியாகி இருந்தது. இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராகவும், கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவை காட்டூர் காவல்துறையினர் 1999 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கில், சென்னை மொய்தீன்; சமிமுல் இஸ்லாம், போத்தனூர் செய்யது அப்துர் ரகுமான் உமரி, சென்னை செய்யது முகமது, தூத்துக்குடி காதர் பாபா; கோவை ஷாஜஹான்,; அபுதாகீர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குஜராத் இனப்படுகொலை: பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் பரிதாப நிலை!
அஹ்மதாபாத் : குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைக்கு பிறகு நிவாரண நடவடிக்கைகளில் மோடி அரசு காட்டிய அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக நசிந்து போனதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத, நகரங்களில் இருந்து மிக தொலைவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில்தான் பெரும்பாலான மக்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் ஒதுங்கிவிட்டதாக குஜராத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜன்விகாஸின் சர்வே கூறுகிறது.
காஷ்மீர்” இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம்
“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது என்னை கொன்று விடுங்கள்’ என்கிறார்
காஷ்மீர், அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம். பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம். தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள்
சம்ஜோதா - மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது!
புதுடெல்லி : 68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளத்தை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டறிந்துள்ளது.
மத்தியபிரதேச மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திர பஹல்வான் என்ற சமந்தர் என்பவர் ரெயிலில் குண்டுவைத்த நான்குபேரில் ஒருவர் என்பதை என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது.
வியாழன், 1 மார்ச், 2012
சம உரிமை பெற்றிட ....!!! முஸ்லிம் சமுகமே திரண்டுவா ....!!!
முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு மத்தியில் 10 % மாநிலத்தில் 7 % வேண்டும் என்ற முழக்கத்துடன் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை , மதுரை, சென்னை, தஞ்சாவூ ர், நெல்லை, ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் 22 ,2012 மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது...
சம உரிமை பெற்றிட ... முஸ்லிம் சமுகமே திரண்டுவா ....என அழைக்கிறது......
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மேற்கு
(இன்னும் 53 தினங்களே உள்ளன)
நரேந்திர மோடியை தண்டிக்க இந்திய சட்டங்கள் தவறினால்?
அஹ்மதாபாத் : குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை, கொடூரமாக படுகொலைச் செய்வதற்காக, மோடி அரசு சதித்திட்டம் தீட்டி, நடைமுறைப்படுத்திய கோத்ரா ரெயில் தீ விபத்து நிகழ்ந்து, 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது.
அயோத்தியில் இருந்து வந்துகொண்டிருந்த, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 5 மற்றும் 6 எண் பெட்டிகளில் பயணித்த 59 பயணிகள் 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ராவில் தீவைத்து கொளுத்தப்பட்டு பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் போலீசின் துணையுடன், சங்க்பரிவார ஹிந்துத்துவா பயங்கரவாதிகள், இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்தனர்.
அ.மார்க்ஸ் எழுதிய "இழப்பதற்கு ஏதுமில்லை" என்ற இந்திய முஸ்லிம்களைப் பற்றிய நூல் வெளியிட்டு விழா
திருச்சி :- திருச்சி மாநகரில் பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய இழப்பதற்கு
ஏதுமில்லை என்ற இந்திய முஸ்லிம்களைப் பற்றிய நூல் வெளியிட்டு விழா நடந்தது. அந்த புத்தகத்தின் முன்னுரை இங்கே தரப் பட்டுள்ளது.நூல் ஒன்றின் விலை ரூ100/-. வேண்டுபவர்கள் தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கப் படும்.
சவுதி ஜுபைல் நகரத்தில் கிடைக்கும். குவைத்திலும் கிடைக்கும். சென்னை,
திருச்சியிலும் கிடைக்கும்.
முஸ்லிம்களை ஏன் எழுத நேர்ந்தது? அ.மார்க்ஸ் [ நான் கடந்த இருபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் குறித்து எழுதியவற்றுள் சில கட்டுரைகளைத் தேர்வு செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமெனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார் எனது நீண்ட நாள் வாசகர் லால்குடி ஷேக் அப்துல்லா.
“இழப்பதற்கு ஏதுமில்லை” என்கிற அந்நூல் சென்ற ஜனவரி 22, 2012 அன்று
திருச்சியில் வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை இது ]
பெண்களுக்கான தேசிய கமிஷனின் தலைவரின் அறிக்கை கண்டனத்திற்குறியது - நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்
பெண்ககள் கவர்ச்சிகரமாக இருக்கிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டதால் தவறாக எடுத்துகொள்ள தேவையில்லை என்ற பெண்களுக்கான தேசிய கமிஷனின் தலைவரான மம்தா ஷர்மாவின் அறிக்கை பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என்று நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செயலகம் குற்றம் சாட்டியுள்ளது.
தேசிய அளவில் உயர்ந்த பதவியில் இருப்பவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கவேண்டியவராகவும் இருக்க வேண்டியவரிடமிருந்து பிரச்சனைகளை ஏற்படுத்துபவர்களுக்கு சாதகமாக அறிக்கை வந்துள்ளது.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாட்டில் எஸ்.டி.பி.ஐயின் தமிழக தலைவர்
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக சென்னையில் அண்மையில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு மாநாட்டிற்கு SDPI மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்து கொண்டார் .மேலும் அவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் ,அதனுடைய விளைவு களை பற்றியும் தெளிவாக பேசினார்.
ஆர்.எஸ்.எஸ் துவேஷத்தை பரப்புகிறது – பிரசாந்த் பூஷண்!
அஹ்மதாபாத் : ஆர்.எஸ்.எஸ்ஸும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்புவதாக பிரபல மனித உரிமை ஆர்வலரும், அன்னா ஹசாரே குழுவில் உறுப்பினருமான பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார்.
குஜராத் இனப்படுகொலைகள் நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியது:
பாப்ரி மஸ்ஜித் அறிக்கையை வெளியிட சி.ஐ.சி உத்தரவு!
புதுடெல்லி : அயோத்தியில் பாபர் மசூதி உரிமையியல் வழக்கில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி பற்றிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்புக்கு (ஏ.எஸ்.ஐ.) மத்திய தகவல் உரிமை கமிஷன்(சி.ஐ.சி) உத்தரவிட்டுள்ளது.
எனினும், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு, உயர் நீதிமன்றத்தின் தடை இருக்கும் பட்சத்தில், அந்த உத்தரவின் நகலை மனுதாரரான சுபாஷ் அகர்வாலுக்கு அளிக்க வேண்டும் என்று தலைமைத் தகவல் கமிஷனர் சத்யானந்த மிஸ்ரா கூறியுள்ளார்.
புதன், 29 பிப்ரவரி, 2012
இது போலி என்கவுன்டர் - யாரையோ திருப்திப்படுத்த நடந்தது: உண்மை அறியும் குழுவின் அறிக்கை
பிப்ரவரி 26, 27 தேதிகளில், சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் குறித்து ஆய்வு செய்த அ மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, இந்த என்கவுன்டர் போலியானது என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அ. மார்க்ஸ் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:
வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த கீழ்க்கண்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
ஆறாத ரணங்கள்! தண்டிக்கப்படாத குற்றவாளிகள்! தீர்வுதான் என்ன?
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக காயமுற்றனர். ஐந்து லட்சம் பேர் சொந்த வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட மிகக்கொடூரமான இனப் படுகொலையின் போது நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்கள் இந்திய வரலாறு காணாதது.
2002 பிப்ரவரி 28-ஆம் தேதி துவங்கிய ஹிந்துத்துவ இனவெறியின் இரத்த தாகம் அடங்க 4 மாதம் ஆனது. 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிக்கு தீவைத்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த இனப்படுகொலை சர்வதேச ஊடகங்களில் இந்தியாவின் முகத்தை களங்கப்படுத்தியது.
செவ்வாய், 28 பிப்ரவரி, 2012
பல வருடங்களாக நடத்தும் சட்டரீதியான போர் என்னை தளர்த்தி விட்டது – கண்ணீருடன் ஸாக்கியா ஜாஃப்ரி
அஹ்மதாபாத் : குஜராத் இனப்படுகொலைக்கு தலைமை வகித்த முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பல வருடங்களாக தொடரும் சட்டரீதியான போர் என்னை தளரச்செய்துவிட்டது என்று குல்பர்க் சொஸைட்டியில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி கூறுகிறார்.
“இனி எனக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எப்பொழுதும் என்னை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் நிற்கின்றனர். இந்த வயதில் என்னால் இயலாது” – மகன் தன்வீர் ஜாஃப்ரி, மகள் நஸ்ரின், பேரப் பிள்ளைகளான தவ்ஸீஃப் ஹுஸைன், ஸுபின் ஹுஸைன் ஆகியோருடன் குல்பர் சொஸைட்டியில் கரியும், புகையும் படர்ந்த தனது பழைய பங்களாவில் இருந்துகொண்டு 70 வயதான ஸாக்கியா ஜாஃப்ரி கண்ணீர் மல்க கூறுகிறார்.
ஜமாதுல் ஆஃகிர் & ரஜப் மாத நிகழ்வுகள்
ஜமாதுல் ஆஃகிர்
Ø
இது இஸ்லாமிய காலண்டரின் 6வது மாதம்.
நிகழ்வுகள்:
Ø
ஹிஜ்ரி 8ம் ஆண்டு ஸலாசில் யுத்தம் நடைபெற்றது.
மரணம்:
Ø
அபூஸலமா (ரலி) அவர்கள் இந்த மாதத்தில் இறந்தார்கள்.
பத்தாண்டுகளுக்கு பிறகு காப்பாற்றியவரை சந்தித்த குத்புதீன்!
மும்பை 2002 மார்ச் 1-ஆம் தேதி மதியம் சூரிய வெளிச்சத்தையும் இருட்டாக மாற்றிய புழுதி படலத்திற்கும், கொலைவெறி கூச்சல்களுக்கும் இடையே உலக சமூகத்தின் உள்ளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த புகைப்படம் பிரபல ஃபோட்டோ க்ராஃபர் ஆர்கோ தத்தாவின் காமரா கண்களில் பதிவானது.
உயிர் பிச்சை கேட்கும் நிற்கதியான அந்த மனிதரின் கண்களில் தென்பட்ட பயம் ஒரு சமூகத்தின் பரிதாப நிலையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
பத்தமடையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய NWF இன் பெண்களுக்கான் மார்க்க விளக்க பொது கூட்டம்
நெல்லை :- பத்தமடையில் நேஷனல் விமன்ஸ் பிரண்ட்(NWF) சார்பில் பெண்களுக்கான மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 26/02/2011 (ஞாயிறு) அன்று நடைபெற்றது. இதற்கு நெல்லை மாவட்ட நேஷனல் விமன்ஸ் பிரண்ட் (NWF) தலைவர் சகோதரி. மும்தாஜ் ஆலிமா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாநில தலைவி சகோதரி. A. பாத்திமா ஆலிமா அவர்கள் உரை ஆற்றிய பொழுது |
நேஷனல் விமன்ஸ் பிரன்ட் ஏன் ? எதற்கு ? என்ற தலைப்பில் சகோதரி . அனீஸ் பாத்திமா அவர்கள் NWF இன் அவசியத்தையும், அது செய்து வரும் பணிகளையும் விளக்கினார்கள். பின்னர் "இஸ்லாத்தின் அடிப்படைகள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய NWF இன் மாநில தலைவர் சகோதரி. A. பாத்திமா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களான ஈமான் , கலிமா , தொழுகை , ஷிர்க், புறம் பேசுதல், வட்டி மற்றும் மறுமை வாழ்க்கை குறித்து எளிமையான நடையில் விளக்கினார்கள்.
எஸ்.டி.பி.ஐ அனைத்து இந்தியர்களுக்குண்டான கட்சி - இ. அபூபக்கர்
பெங்களூர் : கர்நாடக மாநிலம் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக பெங்களூரில் மாபெரும் மாநாடு நடைபெற்றது பீப்புல்ஸ் பொலிடிக்கல் கான்ஃப்ரென்ஸ் (மக்கள் அரசியல் மாநாடு) என்ற இந்த மாநாடு பெங்களூரில் சிவாஜி நகரிலுள்ள சோட்டா மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் உரையாற்றும்போது தேசத்தில் பெரும்பாலானவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது. தேசத்தின்
குஜராத் குல்பர்கா சொசைட்டி விரைவில் நினைவுச் சின்னமாக!
அஹமதாபாத் : ’ககன் சேதி’ எனும் சமூக நீதி மையம் அஹ்மதாபாத்தில் ஆர்.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் எதிரில் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் இதுவரை நடந்துள்ள மோதல்கள் குறித்த அரங்கம்(conflictorium) ஒன்று துவங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதற்கு தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை அளித்த பார்சி பெண்மணிக்கு தாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இந்த அரங்கத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் இன்னும் சில மாதங்களில் முதற்கட்டமாக சில அறைகளில் குஜராத் நிகழ்வுகள் குறித்து கண்காட்சி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
மோடிக்கு ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கடும் கண்டனம்!
அஹ்மதாபாத் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி மீது சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவுறும் வேளையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கை வெளியாகியுள்ளது.
10 வருடங்கள் ஆகியும் இரத்தக்கரையோடு இருக்கும் குஜராத்!
சென்னை: குஜராத் இனப்படுகொலை நடைபெற்று நேற்றோடு 10 வருடங்கள் கடந்து விட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குஜராத் கலவரத்தால் வீட்டை இழந்து, குடும்பத்தினரை இழந்து தவித்து வரும் அனைத்து குடும்பங்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
அஹமதாபாத் பாப்பு நகர் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் முஸ்லிம்கள் |
தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எந்த அரசாங்கமும் நரவேட்டை நாயகனான நரேந்திர மோடியிடம் இருந்து குஜராத் மக்களை இன்று வரை பாதுகாக்க இயலவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும்.
டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - ஆந்திர பாப்புலர் ஃப்ரண்ட் பொதுக்குழு வலியுறுத்தல்
குர்னூல்: ஆந்திர மாநிலம் குர்னூல் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு கூட்டம் 26 மற்றும் 27 ஆகிய இருதினங்களுக்கு நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சகோதரர் அனீஸ் அஹமது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பாப்புலர் ஃப்ரண்டின் ஆந்திர மாநில நிர்வாகிகள் |
இப்பொதுக்குழுவிற்கு தலமைவகித்து தலைமை உரையாற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் ஆந்திர மாநிலத் தலைவர் சகோதரர் முஹம்மது ஆரிஃப் அஹமது. மாநில பொதுச்செயலாளர் டி.எஸ். ஹபீபுல்லாஹ் அவர்கள்
திங்கள், 27 பிப்ரவரி, 2012
‘பா.ஜ.க ஆட்சி வரும் முன்னே ஊழல் வரும் பின்னே’
போபால் : ’யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழியை பா.ஜ.க கட்சியினருக்கு சற்று மாத்தி ‘பா.ஜ.க ஆட்சி வரும் முன்னே ஊழல் வரும் பின்னே’ என்று அழைக்கலாம் போல் இருக்கிறது. இக்கட்சி மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி ஆட்சி செய்த இடங்களில் எல்லாம் ஊழலுக்கும், வகுப்புவாத பரவலாக்கத்திற்கும் எவ்வித குறையும் இருந்தது இல்லை.
சூரிய வழிபாடு, பகவத் கீதை போதனம் என ஹிந்துத்துவா பாசிச மாநிலமாக மத்திய பிரதேச மாநிலத்தை மாற்ற முயலும் பா.ஜ.க ஆட்சியில் ஊழலுக்கும் குறைவில்லை. இதில் ஆச்சரியம் என்னவெனில் ஊழல் குற்றச்சாட்டை எதிர்கட்சியினர் பா.ஜ.க அரசு மீது சுமத்தவில்லை. மாறாக, ஆளும் பா.ஜ.கவைச் சார்ந்த எம்.எல்.ஏக்களே பேரவையில் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
திருவாரூரில் எஸ்டிபிஐ ரயில் மறியல் போராட்டம்
திருவாரூர் : காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை தற்போது உள்ள மீட்டர் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றக்கோரி எஸ்டிபிஐ சார்பில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நேற்று மதியம் 1.30 மணியளவில் திருவாரூர் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு எஸ்டிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் தலைமேயேற்று அகலப் பாதைக்கான பணியை மேற்கொள்ளாத தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)