டெல்லி:ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஒன்றில் புனித திருக்குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
இந்த கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அமெரிக்க ராணுவம் சம்பந்தப்பட்ட இத்தகைய செயல்கள் நடைபெறுவது இது முதல் தடவை அல்ல. 2008-ஆம் ஆண்டு அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட போர் கைதிகள் இது போன்ற ஏராளமான சம்பவங்களை கண்டதாக தங்களது விசாரணையின் போது தெரிவித்தனர். ஒரு சம்பவத்தில் அமெரிக்க ராணுவ வீரன் ஒருவர் துப்பாக்கியால் திருக்குர்ஆனை சுட்டதாகவும் தெரிவித்தனர்.
உலக முஸ்லிம் மக்கள் தொகையில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பதால், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு மத்திய அரசு ஒரு அறிக்கையை அனுப்புமாறு கே.எம்.ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளார்