நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 27 பிப்ரவரி, 2012

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையை சுத்தம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நாடு முழுவதும் "ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்" என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் பற்றியும், உடல் ஆரோக்கியம் பற்றியும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தின் இறுதியாக சென்னை மாவட்டம் சார்பாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனை சுற்றிய பகுதிகளை சுத்தம் செய்யும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டது.




உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியு, தூய்மையான சுற்றுச்சூழலை வலியுறுத்தியும் ஒவ்வொரு வருடமும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வருடம் இப்பிரச்சாரத்தின் துவக்க விழா சில நாட்களுக்கு முன்பாக கோவை மாவட்டத்தில் நடைபெற்றது.
இப்பிரச்சாரத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா பயிற்ச்சி வகுப்புகள், மாரத்தான் ஓட்டம், கராத்தே பயிற்சி, சத்தான உணவுவகைகளை உண்பதற்கான ஆலோசனை முகாம்கள் போன்றவை நடைபெற்றன. இப்பிரச்சாரத்தின் இறுதியாக "கிளீனிங் டே" (சுத்தம் செய்யும் நாள்) என ஒரு நாளை நிர்ணயித்து அன்று பல்வேறு இடங்களை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

அந்த வகையில் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் சுத்தம் செய்தனர்.