நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 27 பிப்ரவரி, 2012

‘பா.ஜ.க ஆட்சி வரும் முன்னே ஊழல் வரும் பின்னே’


போபால் : ’யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’  என்ற பழமொழியை பா.ஜ.க கட்சியினருக்கு சற்று மாத்தி ‘பா.ஜ.க ஆட்சி வரும் முன்னே ஊழல் வரும் பின்னே’ என்று அழைக்கலாம் போல் இருக்கிறது. இக்கட்சி மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி ஆட்சி செய்த இடங்களில் எல்லாம் ஊழலுக்கும், வகுப்புவாத பரவலாக்கத்திற்கும் எவ்வித குறையும் இருந்தது இல்லை.
untitled
சூரிய வழிபாடு, பகவத் கீதை போதனம் என ஹிந்துத்துவா பாசிச மாநிலமாக மத்திய பிரதேச மாநிலத்தை மாற்ற முயலும் பா.ஜ.க ஆட்சியில் ஊழலுக்கும் குறைவில்லை. இதில் ஆச்சரியம் என்னவெனில் ஊழல் குற்றச்சாட்டை எதிர்கட்சியினர் பா.ஜ.க அரசு மீது சுமத்தவில்லை. மாறாக, ஆளும் பா.ஜ.கவைச் சார்ந்த எம்.எல்.ஏக்களே பேரவையில் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


மத்தியப் பிரதேச பேரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக எம்.எல்.ஏ., விஸ்வாஷ் சாரங், சந்தேரி சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்டத்தில் தினக்கூலிக்கு ஆள்களை நியமிப்பதில் பெரும் முறைகேடு நடைபெற்று வருகிறது என்றார்.
இதற்கு பதிலளித்த நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாபுலால் கெளர், இந்த விஷயம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. எனவே இது தொடர்பாக பேரவையில் பிரச்னை எழுப்புவது முறையல்ல என்றார்.
அப்போது குறிக்கிட்ட சாரங், மூன்று ஆண்டுகளாக இந்த விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக மாநில அரசு நீதிமன்றத்தில் எந்த பதில் மனுவையும் தாக்கல் செய்யவில்லை. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமா? இதனை இப்போது தெளிவுபடுத்த வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் ஈஸ்வர்தாஸ் ரோஹானி, இந்த விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே இந்த விஷயத்தில் அமைச்சர் தரப்பில் எதுவும் தெரிவிக்க முடியாது என்றார்.
இதையடுத்து பொதுப் பணித்துறையில் பெருமளவில் ஊழல் நடைபெறுவதாக பாஜகவின் மற்றொரு எம்.எல்.ஏ. அரவிந்த படோரியா குற்றம் சாட்டினார். குவாலியர் பகுதியில் டெண்டர் எதுவும் விடப்படாமலேயே ரூ.51 கோடிக்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே இதுத் தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாஜகவைச் சேர்ந்த கிரிஜா சங்கர் சர்மாவும் இதே போன்று குற்றச்சாட்டு கூறினார். இதையடுத்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினர்.
ஆளும் கட்சி உறுப்பினர்களே அரசின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியதால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ம.பி பா.ஜ.கவின் உட்கட்சி பூசலும் அம்பலமாகியுள்ளது.