நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 24 ஆகஸ்ட், 2013

எகிப்து இராணுவத்தை கண்டித்து தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

தஞ்சை: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவத்தின் துணையுடன் ஆட்சியில் உள்ள சட்டவிரோத இடைக்கால அரசு,தன்னுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளது.

ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக கூறிக் கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கத்திய நாடுகளும் வார்த்தை ஜாலங்களை மட்டும் வெளிப்படுத்துவது மிகவும் துரதிஷ்டவசமானது. மேற்கத்திய அரசுகள் மற்றும் அதன் தலைவர்களின் நயவஞ்சகத்தை இது வெளிப்படுத்துகிறது. உலக நாடுகளின் இந்த நிலை,கொடூரமான கொலைகளை செய்வதற்கு எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அளித்துள்ளது. எகிப்தில் ஜனநாயகத்தை நசுக்கும் இந்த போக்கு மற்ற அரபு நாடுகளிலும் ஜனநாயகம் மலர்வதற்கான பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும். மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியா உலகம் முழுவதும் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் அதிக பங்களிப்பை அளிக்க வேண்டும். எகிப்தின் நட்பு நாடான இந்தியா இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எகிப்திய அரசாங்கத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து ராஜாங்க உறவுகளையும் முறிக்க வேண்டும் என்றும் இந்தியாவிற்கான எகிப்திய தூதரை வெளியேற்ற வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைக்கிறது. இந்தியா போன்ற மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் இத்தகைய நடைமுறை எகிப்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

காரைக்காலில் தடையை மீறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்! காவல்துறையினர் வன்முறை!

காரைக்கால்: சுதந்திர உணர்வையும், சுதந்திர போராட்டத் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் மற்றும் தேசத்திற்கான நமது கடமையை உணர்த்தும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தன்று "வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாவோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து "ஃப்ரீடம் மீட்" என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால் தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை மேற்கண்ட சுதந்திர தின பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. தமிழக காவல்துறையின் இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் கடந்த 16.08.2013ல் நடைபெற்றது.

புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை, தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் S.P.வெங்கடசாமி தலைமையிலான காவலர்கள் அடித்து இழுத்துச் சென்றதோடு, 28 முஸ்லிம்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்து சிறையில் அடைத்தது.

மேற்கண்ட அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த காரைக்கால் S.P.வெங்கடசாமி மற்றும் உடனிருந்த காவல்துறையினரை கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இன்று (21.08.2013) காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ஹாலித் முஹமம்து தலைமையில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயக உரிமையை நசுக்கும் விதமாக மேற்கண்ட S.P.வெங்கடசாமி தலைமையிலான காவல்துறை பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் அனைவரையும் லத்தி சார்ஜ் மூலம் விரட்டியடித்ததோடு கைதும் செய்துள்ளது. பின்னர் முஸ்லிம்கள் மீது பழிப்போடும் எண்ணத்தில் அரசு பேருந்துகளை காவல்துறையே அடித்து நொறுக்கியது.

அப்துல்லாஹ் பெரியார்தாசனின் மரணம் வருத்தம் அளிக்கிறது! - பாப்புலர் ஃப்ரண்

டாக்டர். பெரியார்தாசன் என்ற அப்துல்லாஹ் அவர்கள் ஒரு நல்ல மனிதர், சிறந்த மருத்துவர், கலை நயம் உடையவர் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதியை பகுத்தறிவு கொள்கையை சுமந்து சமூக நீதிக்காக பாடுபட்டவர்.தன்னுடைய வாழ்நாளின் இறுதி நாட்களில் (சுமார் 1254) இயற்கை மார்க்கத்தை எற்று கொண்டு அதன் தூய்மைதன்மையை மக்களிடையே சுழலாக பறைசாற்றும் அழைப்பாளராகவும் திகழ்ந்தவர். அவரின் மரண செய்தி (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன்) பெரும் வருத்ததை எற்படுத்தியது.

எகிப்து இராணுவ அரசாங்கத்துடன் ராஜாங்க உறவுகளை துண்டிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட்

புது டெல்லி: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவத்தின் துணையுடன் ஆட்சியில் உள்ள சட்டவிரோத இடைக்கால அரசு, தன்னுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளது.

ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக கூறிக் கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கத்திய நாடுகளும் வார்த்தை ஜாலங்களை மட்டும் வெளிப்படுத்துவது மிகவும் துரதிஷ்டவசமானது. மேற்கத்திய அரசுகள் மற்றும் அதன் தலைவர்களின் நயவஞ்சகத்தை இது வெளிப்படுத்துகிறது. உலக நாடுகளின் இந்த நிலை, கொடூரமான கொலைகளை செய்வதற்கு எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அளித்துள்ளது. எகிப்தில் ஜனநாயகத்தை நசுக்கும் இந்த போக்கு மற்ற அரபு நாடுகளிலும் ஜனநாயகம் மலர்வதற்கான பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும். மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியா உலகம் முழுவதும் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் அதிக பங்களிப்பை அளிக்க வேண்டும். எகிப்தின் நட்பு நாடான இந்தியா இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சுதந்திர தினம் கொண்டாட தடை! டி.ஜி.பி. அலுவலகம் முற்றுகை போராட்டம்!

 இந்திய தேசம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, 67வது சுதந்திர தின விழா எல்லா தரப்பு மக்களாலும் விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அனைத்து மாநிலங்களிலும் கொடியேற்றம், தியாகிகளை நினைவுகூறுதல், உறுதிமொழி எடுத்தல், சுதந்திர தின பொதுக்கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மட்டும் காவல்துறை சுதந்திர தினம் கொண்டாட அனுமதி மறுத்து பல்வேறு இடையூறுகள் தந்து, முஸ்லிம்களை கைது செய்து ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் அணுவகுப்புடன் கூடிய சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடி வந்த நிலையில் அ.தி.மு.க அரசு பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிம்கள் கொண்டாடுவதற்கு அனுமதி மறுத்து, கைது செய்வது தமிழகத்தில் ஜனநாயக அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா? என்ற கேள்வி வலுவாக எழுபியுள்ளது. இத்தகைய ஜனநாயக விரோத போக்குடன் செயல்படும் தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுதந்திர தின பொதுக் கூட்டத்திற்கு தடை! தேசிய கொடியுடன் 300க்கும் மேற்பட்டோர் கைது!

கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சுதந்திரதின பொதுக்கூட்டம் 15-08-2013 அன்று மாலை 7 மணியளவில் நடத்த தீர்மானிக்கபட்டிருந்த்து. இதில் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் உறையாற்றுவதாக அறிவிக்கபட்டிருந்தது.

காவல் துறை கண்டிப்பாக அனுமதி மறுத்ததால் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தனர் .மாலை 6மணியளவில் மாவட்ட தலைவர் D.செய்யது இப்ராஹீம் உஸ்மானி தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் அறிவிக்கப்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த முயன்றனர். காவல்துறை அவர்களை தடுத்து கைது செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம்,நகர தலைவர் காதர் அலி நகர செயலாளர் முகம்மது கனி உள்ளிட்டோர் கலந்து ஒற்றுமை கோஷங்களை எழுப்பியவாறு கைது ஆயினர்.