இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது அவதூறுகளும், அபாண்டங்களும் அள்ளி வீசப்பட்டு கொண்டிருக்கின்றன. எங்கோ இருக்கின்ற டென்மார்க் தொடங்கி அமெரிக்கா, இஸ்ரேல் என்ன? நம் கண் முன்னால் கடைகளில் தொங்கும்
தினமலர் வரை கேலி சித்திரங்களும், தகாத தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. அதன் உச்சகட்டமாக இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘innocence of Muslims’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.