NOV 2013
சனி, 22 அக்டோபர், 2011
வெள்ளி, 21 அக்டோபர், 2011
ஹாஜிகளின் சேவையில் இந்தியா ஃப்ரடர்னிட்டி ஃபாரம் .
முப்பது இலட்சம் ஹாஜிமார்கள் பரிசுத்தமான ஹஜ் நற்செயலின் பாதுகாப்பு விசயங்களில் சிறிதி கவனம் இருந்தால் விபத்துகளை அதிகமாக குறைக்கவும், சில நேரங்களில் முழுமையாக இல்லாமல் ஆக்கவும் முடியும். கடந்த ஏழு வருட காலம் ஹாஜிமார்களுக்கு உதவிகள் செய்வதற்காக மக்கா, மதீனா, மற்றும் மினாவில் தன்னார்வ தொண்டர்களின் (வாலண்டியர்ஸ்களின்) மூலம் ஹாஜிமார்களுக்காக பெரும் உதவிகளை செய்து கொண்டிருக்கின்ற இந்தியா ஃப்ரடர்ணிட்டி ஃபாரம் ( INDIA FRATERNITY FORUM) கடந்த வருடங்களில் செய்த ஹஜ் வாலண்டியர்ஸ் சேவைகளை விரிவாக அலசி ஆராய்ந்ததில் கிடைத்த முன் அனுபவத்தின் அடிப்படையில் ஹாஜிமார்களுடைய பாதுகாப்பிற்காக தயாராக்கப்பட்டு நடைமுறைபடுத்த வேண்டிய விஷயங்களை இந்த புத்தகம் உட்படுத்தியுள்ளது.
புதன், 19 அக்டோபர், 2011
ஆர்.எஸ்.எஸ் தனது கிளைகளை ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்களில் விரிவாக்க திட்டம் !
மும்பை:ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்யின் தேசிய செயற்குழு கோரக்பூரில் கூடியது. அக்கூட்டத்தில் பேசிய சங்க பரிவார தலைவர் மோகன் பகவத் தற்போது உலகில் உள்ள நவீன தொழிற்நுட்ப சவால்களை சந்திக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் புதிய வழிமுறைகளை மேற்கொள்ளாதது குறித்து தாம் கவலை தெரிவிப்பதாகவும் மேலும் சங்க பரிவார அமைப்புகளை தற்போதைய தொழிற்நுட்பத்திற்கு ஏத்த வகையில் உருவாக்க வேண்டும் என்பதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார். எனவே ஆர்.எஸ்.எஸ்ஸை தொழிற்நுட்ப ரீதியில் முன்னேற்றும் பொறுப்பை தங்களின் கிளை அமைப்பான சேவா பாரதியிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் அதனுடைய வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்களை குறித்து கோரக்பூரில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கேட்டு தெரிந்து கொண்டாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பெரு நகரங்களில் தங்களுடைய அமைப்பை வேரூன்ற செய்வதற்காக முக்கிய நகரங்களுக்காக தனித்தனியே இணையத்தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் நகரங்களிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களுக்கும் விரைவில் இணையதளங்களை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய கொள்கைகளை பரப்புவதற்காக தனது வாழ்நாளில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பிரசாரக்குகளாக பணிபுரிய இளைஞர்களை தயார்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பிரசாரக் என்றால் திருமணம் புரியாமல் வேறு எந்த பணிகளுக்கும் செல்லாமல் ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர ஊழியர்களாக பணிபுரிய வேண்டும். இதற்கு பல இளைஞர்கள் விரும்பாததால் ஆர்.எஸ்.எஸ் தற்போது தன்னுடைய செயல் முறையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இனி பிரச்சாரக்குகள் தன்னுடைய வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அந்த அமைப்பிற்காக முழு நேர ஊழியர்களாக பணி புரிந்தால் போதுமானது என்றும் பிறகு அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்றும் முடிவெடுத்துள்ளது. தற்போது ஆர் எஸ் எஸ் அமைப்பில் பிரசாரக்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பணிகளை தொடர சமூக சேவை அமைப்புகள் என்ற முகமூடியில் நடத்தும் கிளைகளின் மூலம் பிரசாரக்குகளை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் தொடங்கிய பிரச்சார பொதுக்கூட்டம்
சவாய் மதோபூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அடுத்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் "சமூக நீதி மாநாடு" டெல்லியில் பிரசித்திப்பெற்ற இடமான ராம்லீலா மைதானத்தில் வைத்து நடக்க இருக்கிறது. இதன் பிரச்சாரங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் மாநாட்டிற்கான பிரச்சாரம் நேற்று முதல் தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க நகரமான சவாய் மதோபூரில் நேற்று சுமார் ஐயாயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துடன் மாநாட்டிற்கான பிரச்சாரம் அம்மாநிலத்தில் தொடங்கியது.
ஐஸ்ஹவுஸில் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு
சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக அடுத்த மாதம் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் நடக்கவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. தமிழகத்திலும் அதன் பிரச்சாரத்தின் தொடக்கமாக வருகின்ற ஞாயிற்றுகிழமை 23ஆம் தேதி அன்று சென்னை ஐஸ்ஹவுஸ் ஷேக் தாவூது தெருவில் நடத்த சென்னை செயற்குழுக் கூட்டம் முடிவெடுத்துள்ளது.
ஞாயிறு, 16 அக்டோபர், 2011
நகரங்களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்
திருவனந்தபுரம்/பெரும்பாவூர்/கோழிக்கோடு : போலீஸ்-ஆட்சியாளர்களின் உரிமை மறுப்புக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மண்டல அளவிலான பேரணிகள் மூன்று நகரங்களை மக்கள் வெள்ளத்தால் திணறடித்தது.
’ வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம் உலகமெங்கும் பரவுகிறது: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வாஷிங்டன் : அமெரிக்காவில் பொருளாதார சமமின்மைக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய வால்ஸ்ட்ரீட் போராட்ட மாதிரியில் பல்வேறு நாடுகளிலும் போராட்டம் துவங்கியுள்ளது.
வகுப்பு கலவர தடுப்பு மசோதா வேண்டாம்:கூறுகிறது ஆர்.எஸ்.எஸ்
கோரக்பூர் :பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் திட்டமிட்ட வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை(தடுப்பு) சட்டம் சமூகத்தை பிளவுப்படுத்தும் என ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
ரத யாத்திரையை நிறுத்துவிட்டு அத்வானி மன்னிப்புக்கோர வேண்டும்: எஸ்.டி.பி.ஐ
புதுடெல்லி : ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை நடத்தும் அத்வானி யாத்திரையை நிறுத்திவிட்டு மக்களிடம் மன்னிப்புக்கோர தயாராக வேண்டும் என சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறியுள்ளார்.
‘
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)