கோரக்பூர் :பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் திட்டமிட்ட வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை(தடுப்பு) சட்டம் சமூகத்தை பிளவுப்படுத்தும் என ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
கலவரம் நடத்தி ருசிக்கண்ட பூனையான ஆர்.எஸ்.எஸ் இச்சட்டத்தின் பெரும்பாலான பிரிவுகள் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக உள்ளதாக அதன் பிரச்சாரக்சாலக் மன்மோகன் வைத்யா கூறியுள்ளார்.
வகுப்புவாத கலவரத்தை தடுக்கும் மசோதா சமூகத்தை சிறுபான்மை, பெரும்பான்மை என இரண்டாக பிளக்கும் என வைத்யா விளக்கமளித்துள்ளார்.
மசோதாவிற்கு தேசிய ஆலோசனை குழு வடிவமைத்தது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய சட்டமே போதும் என அவர் மேலும் கூறினார்.