நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 2 மார்ச், 2013

கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை கோரி ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும், போர்க்குற்ற விசாரணை நடத்திட ஐ.நா. வை வலியுறுத்தியும், மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் . 

கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. (சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா) கட்சியின் சார்பில் நேற்று(01.03.2013) கோவை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிக்குண்டு வைத்த பயங்கரவாதி கைது!

புதுவை:மும்பையிலிருந்து புதுவை வரும் சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் வெடிக்குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் சிவசங்கர் என்ற பயங்கரவாதி  கைது செய்யப்பட்டுள்ளார். 
மும்பையில் இருந்து புதுவை வந்த ரெயிலில் வெடிகுண்டு
கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது.

மார்ச் 4, “ஈழத்தோழமை நாள்”, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி பங்கேற்ப்பு

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழு கூட்டம் ஜெனிவாவில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் இம்முறை இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை கொண்டு வர முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
புலம் பெயர் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் ஜெனிவாவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக மார்ச் 4 தேதி ஈழத்தோழமை நாள் என அறிவித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் சார்பில்

காஞ்சி காமகோடியின் வெறிப் பேச்சு!


திருச்சி:- பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நடுநிலை வகிக்கிறேன் என்ற பெயரால் நாடகமாடிய சங்கரராமன் கொலைக் குற்றவாளியான காஞ்சி காமகோடி சங்கரச்சாரியார் தனது உளக்கிடக்கையை வெளியிட்டுள்ளார்.
காஞ்சி சங்கராச்சாரியார்
ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் ராமர்கோயிலை கட்டமுடியும் என்று நேற்று திருச்சியில் துவங்கிய ஹிந்துத்துவா துறவியர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.

வெள்ளி, 1 மார்ச், 2013

ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது புலனாய்வு ஏஜன்சிகளா?


புதுடெல்லி:- பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்ஸல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக எழுந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை தவிர்க்கவே மத்திய அரசே திட்டமிட்டு நிகழ்த்தியதுதான் ஹைதராபாத் இரட்டைக்குண்டுவெடிப்பு என்று சிவில் உரிமை அமைப்பான ரிஹாய் மஞ்ச் குற்றம் சாட்டியுள்ளது.
HyderabadBlasts
தீவிரவாதிகள் என்று பொய்க் குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக பாடுபடும் அமைப்புதான் ரிஹாய் மஞ்ச். தேசிய ஊடகங்கள் வலதுசாரிகளின் வளர்ப்பு மிருகங்களைப் போல செயல்படுவதாக அவ்வமைப்பு குற்றம் சாட்டுகிறது.

பூரண மதுவிலக்கு : வைகோவின் நடைபயண நிறைவு பொதுக்கூட்டம்!எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பங்கேற்பு!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி SDPI கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் 17 வரை தமிழக முழுவதும் மனித சங்கிலி, ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, தலைமைச் செயலகம் முற்றுகை போன்ற போராட்டங்களை வீரியமாக நடத்தியது. 
தொடர்ந்து கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் மட்டும் பங்கேற்ற மாபெரும் பேரணியை நடத்தியது. மேலும் அடுத்த மாதம் மதுரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

வி.களத்தூரில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் சிறையில் அடைப்பு :சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாபெரும் தர்ணா போராட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் மற்றும் மாநில நிர்வாகிகள் 28.02.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதிக்கு சென்று அங்குள்ள ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்தித்து பேசினார்கள் . 
பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியதாவது :" கடந்த 22.01.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள். இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டு வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

காஷ்மீரில் போராட்டம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காஷ்மீரில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில், கடந்த மாதம் 9ஆம் தேதி அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு டெல்லி திகார் சிறைச்சாலையிலே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

வியாழன், 28 பிப்ரவரி, 2013

தமிழகத்தை ஆள்வது அரசு துறையா?உளவு துறையா?ஓட்டுப்போட்ட மக்களுக்கு சந்தேகம்- பாப்புலர் ஃப்ரண்ட்

சமீபத்திய மக்கள் பிரச்சனைகளில் தமிழக அரசின் தலையீடு விஷயத்திலும், அதில் முடிவு எடுக்கப்பட்ட விதத்திலும் ஒரு நல்ல அணுகுமுறையை நாம் பார்க்க நேர்ந்தது. அது, மத உணர்வுகளை காயப்படுத்தும் சினிமா படத்திற்கு எதிரான முடிவானாலும் சரி, விவசாயிகளுக்கான காவிரி நீர் போராட்டத்தின் நிலையானாலும் சரியே.
ஆனால், இப்படிப்பட்ட அரசின் கொள்கைக்கும் செயலுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரையிலும் காவல்துறையின் ஒருவிதமான மக்கள் அடக்குமுறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அது முஸ்லிம்கள், தலித்துகள், மனித உரிமை ஆர்வலர்கள் நடத்தும் போராட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பிரதிபலிக்கின்றது. ஒருவேளை இச்செயல் முதல்வர் அவர்களின் பார்வைக்கு உளவுத்துறையால் சரியான முறையில் கொண்டு செல்லப்பட்டதா அல்லது இவ்விஷயங்கள் என்ன மாதிரியாக உளவுத்துறையால் முதல்வரிடம் தெரியப்படுத்தப்பட்டது என்பதை நம்மால் அறிய முடியவில்லை.

நடுத்தர ஏழை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்-எஸ்.டி.பி.ஐ

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இந்திய நாட்டின் 82 வது பொது பட்ஜெட்டினை 8 வது முறையாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்துள்ளார். இதில் நடுத்தர, ஏழை மக்களை வாட்டி வதைக்கும் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 
பட்ஜெட்டின் முன்னுரையின் போது, நிதியமைச்சர் அன்னிய முதலீடின்றி இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமாகாது என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த பட்ஜெட் அந்நிய முதலீட்டை மையப்படுத்தியே அமைந்துள்ளது. இதனால் இந்திய வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இது அபாயகரமானது, நாட்டின் நலனுக்கே எதிரானது. 

திங்கள், 25 பிப்ரவரி, 2013

குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!

ஹைதராபாத்:- ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு கழித்த போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது. பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 5க்கும் அதிகமான இளைஞர்களை விசாரணை என்று போலியாக கூறி பிடித்துச் சென்றுள்ளனர். இவர்களில் பலரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.
குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்கள் நிரபராதிகள் என்று தெரிந்த பின்னர் அரசு இவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலைச் செய்தது.

SDPI கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் மாநில தலைவர் தலைமையில் கடையநல்லூரில் நடைபெற்றது.


கடையநல்லூர் :-  SDPI  கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் 24-02-2013 அன்று மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாக்கவி தலைமையில் நடைபெற்றது.



ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013


கடையநல்லூர் :- பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பட்டுத்துறை சார்பாக 24.02.2013 ஞாயிறு அன்று முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் விழிப்புணர்வு 

முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம்  பேட்டை, மதினாநகர் மற்றும் கிழக்கு பகுதி இக்பால் நகர்இரசாலியாபுரம் தெரு, பரசுராமபுரம் தெரு ஆகிய இடங்களில் நடைபெற்றது.

பயங்கரவாதியாக செயல்பட்ட IPS அதிகாரி!

பிப் 24: கடந்த 2004ல் மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவீத் ஷேக், ஜவஹர், அம்ஜத் அலி உள்ளிட்ட 4 அப்பாவிகளை மோடியை கொல்ல வந்தனர் என்று சொல்லி மோடியின் ஹிந்துத்துவா போலீஸ் சுட்டு கொன்றது.