பிப் 24: கடந்த 2004ல் மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவீத் ஷேக், ஜவஹர், அம்ஜத் அலி உள்ளிட்ட 4 அப்பாவிகளை மோடியை கொல்ல வந்தனர் என்று சொல்லி மோடியின் ஹிந்துத்துவா போலீஸ் சுட்டு கொன்றது.
இவர்கள் லஸ்கர் தாய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் மோடியை கொல்ல திட்டம் தீட்டி கொண்டிருந்த பொழுது அங்கு சென்ற போலீஸ் உடன் நடந்த மோதலில் சுட்டு கொல்லப்பட்டனர் என்று குஜராத்தின் ஹிந்துத்துவா போலீஸ் எஸ்.பி. G .L . சிங்கா அறிவித்தார்.
அந்த அப்பாவி பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தீவிரவாதிகள் இல்லை குஜராத் மோடியின் ஹிந்துத்துவா பாசிச போலீஸ்தான் தீவிரவாதிகள் என்று கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். இவர்களது வழக்கை செப். 2009இல் விசாரித்த அகமதாபாத் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம் இறந்துபோன அந்நால்வரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, “இதுவொரு போலிமோதல் கொலை என்று அறிவித்தது.
மேலும், அந்த 4 வரும் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு முந்திய தினம் மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று அகமதாபாத் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மோடி அரசு நீதிமன்றம் தனது வரம்பை மீறி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறி நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொள்ள மறுத்துவிட்டது. இதை எதிர்த்து இறந்து போன அப்பாவிகளின் பெற்றோர் சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ போலியாக என்கவுண்டரில் அப்பாவிகளை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக குஜராத்தின் “கிரைம் ரெக்கார்ட் பீரோ”வின் எஸ்.பி.யான, ஜி.எல்.சிங்காலை, சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். போலி என்கவுண்டர் வழக்கின் முக்கிய குற்றவாளியாக சிங்கால் சேர்க்கப்பட்டுள்ளர். இது குஜராத் அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இவர் மீது, கொலை செய்தது (302), சாட்சியங்களை அழித்தது (201) உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரியான சிங்கால் தவிர இந்த வழக்கில் மேலும் 20 அரசு அதிகாரிகளும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஒரு IPS அதிகாரி சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு பயங்கரவாதியாக செயல்பட்டிருப்பது இவர்களது IPS படிப்பையே கேள்விகுறி ஆக்குகிறது*