நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 28 பிப்ரவரி, 2013

நடுத்தர ஏழை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்-எஸ்.டி.பி.ஐ

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இந்திய நாட்டின் 82 வது பொது பட்ஜெட்டினை 8 வது முறையாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்துள்ளார். இதில் நடுத்தர, ஏழை மக்களை வாட்டி வதைக்கும் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 
பட்ஜெட்டின் முன்னுரையின் போது, நிதியமைச்சர் அன்னிய முதலீடின்றி இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமாகாது என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த பட்ஜெட் அந்நிய முதலீட்டை மையப்படுத்தியே அமைந்துள்ளது. இதனால் இந்திய வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இது அபாயகரமானது, நாட்டின் நலனுக்கே எதிரானது. 

நாட்டில் 17% உள்ள சிறுபான்மையினர் நலனுக்காக அரசு 3,511 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. அவர்களின் முன்னேற்றத்திற்காக உருப்படியான எந்த வித திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இது சிறுபான்மை மக்களையும், முஸ்லிம்களையும் பெரிதும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. 

கடந்த பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தாத நிலையில் இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி, யானை பசிக்கு சோளப்பொறி தருவது போல இருந்தாலும் இதை எப்படி சிறுபான்மையினர் நலனுக்கு முழுமையாக பயன்படுத்தப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. 

அதே சமயம் தூத்துக்குடியில் 7,500 கோடி ரூபாய் செலவில் புதிய துறைமுகம் கட்டப்படும் என்ற அறிவிப்பும், விவசாயக் கடன்களுக்கு நிதி ஒதுக்கீடும், ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி சற்று ஆறுதல் அளித்தாலும், இந்த பட்ஜெட் நடுத்தர, ஏழை மக்களுக்கு எந்த வித பலனும் அளிக்கப்போவதில்லை என்பதுதான் உண்மைஇவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்


இப்படிக்கு 

B.S.I.கனி 
மாநில செய்தி ஊடகத்துறை
,SDPI கட்சி, தமிழ்நாடு 
தொடர்புக்கு -9655809510