NOV 2013
சனி, 20 அக்டோபர், 2012
வெள்ளி, 19 அக்டோபர், 2012
பாப்புலர் ப்ரண்ட் ஏன் ? சம நீதி மாநாடு - கேரளா மாநிலம் கொச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்
கேரளா : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேரளா மாநிலம் கொச்சியில் 18.10 .2012 அன்று நடத்திய சம நீதி மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை குறித்து அவதொர்று பரப்புபவர்களுக்கு இம்மக்கள் வெள்ளம் தகுந்ததொரு பாடமாக அமைந்தது. மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் எந்தவொரு இயக்கத்தையும் தவறான பிரச்சாரங்கள் மூலம் தடுத்து விட முடியாது என்பதை இம்மாநாடு தெளிவுப்படுத்தியது. தேச விரோத சக்திகளுக்கு தகுந்ததொரு எச்சரிக்கையையும் இம்மாநாடு விடுத்துள்ளது.
மாநாடு நடைபெற்ற மெரைன் டிரைவ் பகுதிக்கு காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் மாநாடு
கோவை மண்டல மாநாடு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்டின் மாநில தலைவர் இஸ்மாயீல் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை
கோவை (அக்டோபர் 19 , 2012) : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் " குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் - நீதிக்கான முழக்கம் " என்ற தலைப்பில் கோவை மண்டல மாநாடு நடைபெறுகின்றது . மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! என்ற முழக்கத்தோடு இம்மாநாடு நடைபெறும்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஒடுக்கப்பட்ட சமூகங்களை கல்வி, சமூக மேம்பாடு என அனைத்து தளங்களிலும் சக்திப்படுத்த ஜனநாயக வழிமுறைகளில் போராடும் தேசிய அளவிலான ஒரு மக்கள் பேரியக்கமாகும். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சக்திபெறுவதை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ப்ரண்டிற்கு எதிராக பல அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.
புதன், 17 அக்டோபர், 2012
குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குழு மக்களை அவர்களின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக சந்திக்கும். ஆங்கிலம், இந்தி, உருது, பெங்காளி, மணிப்பூர், மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலயாளம் ஆகிய மொழிகளில் சுவரொட்டிகளும் பிற பிரச்சார சாதனங்களும் விநியோகம் செய்யப்படும். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழுக்கள் வாகன பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் பத்து இலட்சம் நகரங்கள் மற்றும் கிராமங்களை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
சமநீதி மாநாடுகள் கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடத்தப்படும். கர்நாடகாவில் பெங்களூர், குல்பர்கா, மைசூர் மற்றும் மங்களூர் நகரங்களில் மக்கள் மாநாடுகள் நடத்தப்படும். ஆந்திராவின் குர்னூலில் மாநில மாநாடும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேசிய ஒற்றுமை மாநாடும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது போன்ற பெரும் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டின் நிறைவை குறிக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களின் சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் மக்கள் ஆதரவு மாநாடு தலைநகர் டெல்லியில் வைத்து நடைபெறும்.
திங்கள், 15 அக்டோபர், 2012
புளியங்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்-பொதுக்கூட்டம்!
புளியங்குடி: நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பாக புளியங்குடியில் வைத்து ஏன் பாப்புலர் ஃப்ரண்ட்? துவக்க நாள் பொதுக்க்கூட்டம் 14 - 10 - 12 ஞாயிற்றுக்கிழமை அன்று 6.45 மணியளவில் நடை பெற்றது. இதில் புளியங்குடி நகரபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமை தாங்கினார்கள்.நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)