மங்களூர் : கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மங்களூரில் கடந்த 14ஆம் தேதி அன்று துணை ஆணையர் அலுவலகத்திற்கு அருகே ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க அரசு வர்ணாசிரமக்கொள்கையான ஜாதி முறையை இந்துத்துவாவினரின் தூண்டுதலோடு கல்வி முறையில் புகுத்த முற்பட்டுள்ளது.
பி.யு தேர்வு எழுதுவதற்கான விண்ணப்ப படிவத்தில் ஜாதியை குறிப்பிடும்படி நிர்பந்தித்துள்ளது பா.ஜ.க அரசு. இதனை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மாவட்ட தலைவர் ஹைதர் ஹபீப் "மதச்சாற்பற்று, மக்களாட்சி கொள்கையின் படி நடக்க வேண்டிய பா.ஜ.க அரசு கல்வித்துறையில் ஜாதி முறையை புகுத்த முயற்சி எடுத்து வருகிறது, இப்படி செயல்படுத்துவதினால் மக்களின் வாழ்க்கை தரம் கீழ் நோக்கி செல்லுமே தவிர முன்னேற்றம் அடையமுடியாது."