கோபல்கஞ்ச்:பீகார் மாநிலம் கோபல்கஞ்ச் திர்பிர்வா பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முஸ்லிம்கள் தங்களது ஜும்மா தொழுகையை தொழுது கொண்டிருந்த போது, அவ்வாழியாக வந்த ஹோலி பண்டிகை ஊர்வலத்தினர் களியாட்டம் ஆடி பாடல்கள் பாடிக்கொண்டு வரவே, அவ்வாறு பாடல்கள் பாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆகையால் அந்த கும்பல் கற்களைக் கொண்டு எறிந்து மோதலில் ஈடுபட்டது. அதில் 12 பேர் காயமடைந்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மக்களை சமாதானம் செய்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் தருணத்தில், சனிக்கிழமை அன்று மோட்டர் சைக்கிளில் சென்ற நபரை தாக்கியதால் மீண்டும் அந்த பகுதியில் மோதல்கள் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஆகையால் காவல் துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, மக்களை சமாதானம் செய்து இயல்புநிலைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் இருதரப்பினரிடம் இருந்து புகார்களை மட்டுமே பதிவு செய்துள்ளனர், யாரையும் கைது செய்யவில்லை. அதே சமையம் அங்கு மீண்டு இயல்பு நிலை உருவாக அமைதி பேச்சுவார்த்தை செயற்குழு ஒன்றை காவல் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.