தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் துவங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் காலை 10:30 மணியளவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் நீதிமன்றம் முன்பு சாலை மரியலிலும் ஈடுபட்டனர்.
இதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இந்த போராட்டத்தை வலுவூட்டும் விதமாக மதுரையில் நடந்த சாலை மரியலில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவர் சாகுல் அலாவுதீன் அவர்கள் கலந்து கொண்டார். இது போல திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கேம்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் முஹம்மது தம்பி கலந்து கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்தார்.