நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

முஸாஃபர் நகர் கலவரம் - பின்னணியில் பா.ஜ.க வின் மதவாத அரசியல் : பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!


புதுடெல்லி : உத்தரபிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் நடந்து வரும் கலவரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சமூகங்களிடையே பா.ஜ.க வெறுப்பு மற்றும் பகைமையை தூண்டுகிறது. கலவரத்தில் அப்பாவிகள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். கலவரத்தை உடனடியாக தடுக்காவிட்டால் மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் பரவும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. உள்ளூர் சம்பவத்தை பல உயிர்களை பறிக்கும் வகையில் மிகப்பெரிய கலவரமாக மாற்றியதில் பா.ஜ.க எம்.எல்.ஏ முக்கிய பங்கினை வகித்துள்ளார்.
 
மேலும் முஸ்லிம் கும்பலால் ஒரு சிறுவன் அடித்து கொல்லப்படக்கூடிய பொய்யான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. ஆனால் இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவுக்கு வெளியே பதிவுச் செய்யப்பட்ட வீடியோவாகும். இந்த வீடியோவை கூட ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ தான் பகிர்ந்துள்ளளார். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் மிக மோசமான நிலைமை ஏற்படும். மாநில அரசு சரியான நேரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கட்டுப்படுத்தியதால், ஒரு பெரிய அளவிற்கு கலவரம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. 
 
கலவரம் பிற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தி, அனைத்து குடிமக்களின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேவையான எல்லா நடவடிக்கைகளையும்  மாநில மற்றும் மத்திய  அரசுகள் உடனே எடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. இக்கலவரத்திற்கு பின்னணியில் உள்ள உண்மைக் குற்றவாளிகளை வெளிக்கொண்டுவரும் வகையில், பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.
 
எல்லா சமூகங்களைச் சேர்ந்தவர்களும் குற்றவாளிகள் மற்றும் வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உத்தரபிரதேச மக்களை கேட்டுக் கொள்கிறது.
 

இப்படிக்கு 
 
O.M.A.ஸலாம்
 
தேசிய பொதுச் செயலாளர்
 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா