துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:30) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
NOV 2013
சனி, 3 செப்டம்பர், 2011
‘அன்னா ஹசாரே உண்மையில் நாட்டு பற்றாளராக இருந்தால் கஷ்மீர் வந்து போராட வாருங்கள் - ஹுரியத் அமைப்பு
காஷ்மீரில் வந்து போராட்டம் செய்யும்படி அன்னாவுக்கு காஷ்மீர் மிதவாத ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வியாஸ் பரூக் அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீர் மனித உரிமை கமிஷன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அடையாளம் தெரியாத 2 ஆயிரம் பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையிடம் விசாரித்தபோது, அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறியுள்ளனர்’ என்று கூறியிருந்தது. இதை சுட்டிக்காட்டிய மிர்வியாஸ், ‘அ‘னா எங்களின் கோரிக்கையை ஏற்று, இப்படி அப்பாவிகள் கொல்லப்படுவதை தட்டிக்கேட்க எங்களுடன் போராட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
வெள்ளி, 2 செப்டம்பர், 2011
ஐ.நா. அறிக்கையைத் தொடர்ந்து துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது
அங்காரா:இஸ்ரேல் தூதரை துருக்கி வெளியேற்றியது. அத்தோடு வரும் வெள்ளிக்கிழமை அது இஸ்ரேலுடன் இராணுவத் தொடர்புகளைத் துண்டிக்கிறது என்று துருக்கி கூறியுள்ளது.
கடந்த வருடம் துருக்கியிலிருந்து காஸாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஃப்ளோடில்லா கப்பலை இஸ்ரேலிய கப்பற்படை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு 9 பேரைக் கொன்றது.
அன்னா உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் – கொதிக்கிறார் மணிப்பூர் இரும்புப் பெண்
இம்பால்:அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி விமர்சித்துள்ளார்.
அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.
வியாழன், 1 செப்டம்பர், 2011
குஜராத்:லோகாயுக்தா சட்டத்தை அமுல்படுத்துவதில் தவறில்லை – மத்திய அரசு
புதுடெல்லி : குஜராத்தில் முதல்வரைக் கடந்து ஆளுநர் லோகயுக்தா சட்டத்தை அமுல்படுத்தியதில் தவறில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டப்படி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் மட்டும் ஆளுநர் கலந்தாலோசனை செய்தால் போதுமானது என்று சட்டத்துறை அமைச்சர் ஸல்மான் குர்ஷித் கூறினார்.
தானே,பன்வேல் குண்டுவெடிப்பு: 2 ஹிந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு 10 வருடம் கடுஞ்சிறை
தானே : 2008-ல் தானேயிலும், பன்வேலிலும் நடந்த 3 குண்டுவெடிப்புகளின் வழக்கில் ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.
ஹனுமந்த் கஸ்கரி, விக்ரம் வினய் பாவே ஆகியோர்தான் அந்தத் தண்டனை பெற்றவர்கள். இவர்கள் குற்றவாளிகள் என்று திங்கள்கிழமை நீதிமன்றம் தீர்மானித்தது.
ஹரேன் பாண்டியா கொலை: சந்தேக முள் மீண்டும் மோடியை நோக்கி!
காந்திநகர்:குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 முஸ்லிம் இளைஞர்களை “இவர்கள் குற்றம் செய்ததை நிரூபிப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து சந்தேகத்தின் முள் மீண்டும் மோடியை நோக்கித் திரும்பியுள்ளது.
மேற்கு வங்கம் பெயர் மாறுகிறது!
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் விரைவில்
'பஷிம் பங்கா' என மாற்றம் செய்யப்படவிருக்கிறது.பங்களா, பங்களா பூமி, பஷிம் பங்கா உள்ளிட்ட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் 'பசிம் பங்கா' (Pashchimbanga) எனும் பெயரை மாநில அரசும், எதிர்க்கட்சிகளும் ஏகமனதாக தெரிவு செய்தன.
கழுத்து வலி...
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.
புதன், 31 ஆகஸ்ட், 2011
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
நாசரேத்தில் மசூதி இடிக்க முயற்சி: வகுப்பு கலவரம் மூளும் அபாயம்!
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை இடிக்க முயற்சி நடப்பதால், அப்பகுதியில் வகுப்பு கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1950ம் ஆண்டுக்கு முன்னால் முஸ்லிம் சமுதாயத்தினர் பெருவாரியாக வசித்து வந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாக ஏராளமான முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து பல்வேறு ஊர்களுக்க்ச் சென்று விட்டனர். அப்போது அவர்கள் விட்டுசென்ற 76 ஏக்கர் நிலம் தற்போது பெருவாரியாக அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு மசூதியும் இப்பகுதியில் உள்ளது. இந்த மசூதி காலப்போக்கில் பாழடைந்து போனது.

நிஜங்கள் மாத இதழ்
நிஜங்கள் ஏப்ரல் மாத இதழின் தலைப்புகள்
01. அரேபியாவில் புதிய மாத இதழ் அறிமுகம்........
02. ஆழிப்பேரலையின் கோரப்பிடியில் ஜப்பான்.....
03. தாய்பாலில் .....
04. புழுதிப் புயல்......
இன்னும் அறியவேண்டிய செய்திகள்.............http://www.scribd.com/doc/56621147/April-may-2011-Nijangal

3 தமிழர்களையும் தூக்கிலடக்கூடாது : சோஷியல் டெமாக்ரடிக் கட்சி (SDPI) கோரிக்கை!
சென்னை :- ஆக. 27
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, "சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா வின் (SDPI) தமிழ் மாநில தலைவர்,K.K.S.M.தெஹ்லான் பாகவி, கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயக நெறிமுறைக்கு முரணான "தடா" சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சித்திரவதை மூலம் அவர்களிடமிருந்து பெறப்பட்ட, வாக்கு மூலங்களை சாட்சியமாக கொண்டு, வழங்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனையை, மனித நேயம் உள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக சட்டமன்றத்தில், இந்த மரண தண்டனைக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் மூலம் இம்மரண தண்டனையை ரத்து செய்ய வாய்ப்புள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 3 தமிழர்களின் உயிர்களையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என செய்தி வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் காயிதே மில்லத் ஆற்றிய உரை
தமிழின் பொற்காலம்
(சென்னையில் -1968 நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் "தமிழின் பொற்காலம்" என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை)
மூத்த மொழி
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை படிக்கும்போது நமக்கு ஏற்ப்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்துக் கூற முடியாதது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. " வண்ணமும் கண்ணமும்" என்ற இந்த இரண்டு சொற்களை என்ன அர்த்தத்தில் குறிப்பிட்டார்கள் என்பது தான் தெரியாமல் இருக்கிறது. சிலப்பதிகாரம் பண்டைய காலப் பூம்புகாருக்கே நம்மை கொண்டு செல்கின்றது. அக்காலத்தில் விஞ்ஞான வசதிகளைப் பெற்றவர்களாக இல்லாதிருந்தும் கூட, மிகச் சிறப்பாக வாழ்ந்திருகிறார்கள். மண்பாண்டங்கள், மற்றுமுண்டான பண்டங்களைச் செய்து-நாகரிகத்தின் உச்சியிலே தமிழன் இருந்தான் என்றால், இது ஒன்றே அவன் சிறப்புக்குப் போதாதா என்ன? எல்லாவற்றுக்கும் மேலாக அவன் சிறப்பு செய்து வாழ்ந்தானே அதைத் தானே நமது பொற்காலம் என்று கூற வேண்டும்.
மண்ணியலார், பூமி முதலில் ஆவியாக - தண்ணீராக இருந்து பின்னர் மண்ணாக மாறியது என்று கூறுகிறார்கள். மனிதன் மண்ணிலிருந்து தோன்றினான் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அவ்வாறு தோன்றிய முதல் பகுதியே திராவிடம் தான் என்றும் முதல் மனிதரே இந்த தமிழ் மண்ணில் தான் பிறந்தார் என்றும் கூறுகிறார்கள். அப்படியானால் அந்த முதல் மனிதர் பேசிய மூத்த மொழி "தமிழ்" என்று கூறுவதில் தவறேதும் இருக்க முடியாதல்லவா? "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்" என்று நாம் சிறப்பித்து கூறுவதும் இவ்வுண்மையை பிரதிபலிக்கக் கூடியது தானே?

லோக்பால் மூலம் மிகப்பெரிய அற்புதத்தை எதிர்பார்க்க முடியாது: நீதிபதி சந்தோஷ் ஹெக்டே
பெங்களூரு:லோக்பால் மசோதாவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேசமயம், மிகப் பெரிய அற்புதத்தை நாம் எதிர்பார்க்க முடியாது என்று நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.
ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. ஜனலோக்பால் வரைவு மசோதாவை உருவாக்கிய குழுவில் இவரும் ஒரு முக்கிய உறுப்பினர். இருப்பினும் அன்னா ஹஸாரேவின் போராட்ட முறையால் அதிருப்தி அடைந்து அதிலிருந்து விலகியிருந்தார் ஹெக்டே.
திங்கள், 29 ஆகஸ்ட், 2011
வாசகர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!
ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்தோம்.
தகதகக்கும் வெயிலில் தனித்து, தாகித்து, பசித்திருந்தோம்.
தகதகக்கும் வெயிலில் தனித்து, தாகித்து, பசித்திருந்தோம்.
அமல்களைக் கொண்டு இரவைப் பகலாக்கினோம்.
அள்ளி அள்ளி தானதர்மம் செய்தோம்.
அள்ளி அள்ளி தானதர்மம் செய்தோம்.
இதோ… அதன் மகிழ்ச்சியைக் கொண்டாட ‘ஈத்’ எனும் பெருநாள் வந்துவிட்டது.
எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
சங்க நாதம் முழங்கட்டும்.
சாந்தி பரவட்டும்.
சங்க நாதம் முழங்கட்டும்.
சாந்தி பரவட்டும்.
இந்த மகிழ்ச்சி என்றும் நிலைபெற…
இறையருள் இகமெங்கும் பரவ…
இறையருள் இகமெங்கும் பரவ…
வாசகர்களை மனமாற வாழ்த்துகிறது.
சுதந்திர தினத்தில் வீண் பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறை........
கடையநல்லூர், ஆக.15-
சுதந்திரதினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் நெல்லை மாவட்டத்தில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அணிவகுப்பு நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதுதொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போலீசாருடன் பேச்சிவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்களுக்கு அனுமதி வழ ங்கப்படவில்லை. இருந்தபோதிலும் அவர்கள் அனுமதியின்றி அணிவகுப்பு நடத்தலாம் என்று கருதப் பட்டது. இதனால் அணி வகுப்பு நடத்த அனுமதி கேட்டிருந்த இடங்களில் போலீசார் நேற்றே குவிக்கப்பட்டனர்.
மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!
பகுத்தறிவற்ற எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.
இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.
இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011
கடையநல்லூரில் SDPI சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் நைனா முஹம்மத் கனி அவர்கள் தலைமை தாங்கினார். வரவேற்புரை மாவட்ட பொதுசெயலாளர் யாசர்கான் அவர்கள் வழங்கினார் . சிறப்புரை மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் M .Y மகபூப் அன்சாரி பைஜி அவர்களும் ,மாவட்ட தலைவர் திவான்ஒலி அவர்களும் வழங்கினார்கள். நன்றியுரை நகர செயலாளர் ரஹ்மதுல்லா ஆலிம் அவர்கள் வழங்கினார் .
வரலாற்றில் சில ஏடுகள்
1)தீரர் திப்பு சுல்தான் அவர்களின் சிறுவயது பிராயம்,அவருக்கு அப்போது அவர் தாயார் காய்கறிகளை காட்டி சொல்வார்களாம்,” இதோ பார்,இது என்ன தெரியுமா?இந்த பெரிய காய்தான் பரங்கியரின் தலை,(வெள்ளையர்)அதன் தலையை சீவு பார்க்கலாம்”என சொல்லி,வாளையும் கையில் கொடுத்து பயிற்சி செய்வாராம்.அந்த காய்தான் பிறகு பரங்கிக்காய் என வழக்கில் வந்தது.அப்பேற்பட்ட தீரர் திப்புவை,பூர்னையா என்ற பிராமணன்,ஆங்கிலேயனிடம் காட்டிக்கொடுத்தான்.
காயல்பட்டினத்தில் காவல்துறை கபளீகரம்!!!
காயல்பட்டினத்தில் காவல்துறையின் காட்டு தர்பார். ஆம் கடந்த 1993 ம் ஆண்டு நமதூர் காயல்பட்டினம் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கலவரத்தின் போது காவல்துறையின் மோசமான நடவடிக்கைகளை கண்டித்து பத்திரிக்கைகள் மேற்கண்ட தலைப்பிட்டு சித்தரித்தன. அதே ரீதியில் இன்று ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் திரு பார்த்திபன் காயல்பட்டின மக்கள்மீது தனது பாசிச நடவடிக்கைகளாலும், துவேஷ போக்காலும் பத்திரிக்கைகளில் மேற்படி தலைப்பை மீண்டும் வரவழைக்கவே திட்டமிடுகிறார் போல தெரிகிறது. |
நோன்புப் பெருநாள் தர்மம்
புனிதமான இந்த மாதத்தில் இறைவன் கடமையாக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் ஸகாதுல் பித்ர் ஆகும். உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், நோன்பாளிக்கு ஏற்படும் தவறுகள், கெட்ட வார்த்தைகள், வீண் விளையாட்டுகளில் இருந்து பரிசுத்தமாகவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ரமழான் மாதத்தில் பூரணமாக நோன்பு நோற்று வணக்கங்களை இலகுவாக நிறைவேற்றியதையிட்டு இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் நோக்கோடு இறைவன் இதை கடமையாக்கியுள்ளான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)