துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:30) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.
பல்வேறு நாட்டை சார்ந்த மக்கள் சங்கமித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உற்ச்சாகம் எங்கும் கரை புரண்டோடியது.