ஹைதராபாத் நகரில் நேற்றைய தினம் (21.02.2013) நடைபெற்ற தொடர்
குண்டுவெடிப்பில் 15 அப்பாவிகள் பலியாகினர். 83 க்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.இக்குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும்
கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது .
இறந்த பதினைந்து அப்பாவிகளின்
குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் , காயமடைந்தவர்கள்
விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் . இதைப் போன்ற தாக்குதல்கள்
மக்களிடையே அமைதியின்மையையும் ,நல்லிணக்கத்தையும் குலைக்கின்றன.
இத்தருணத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு தீய சக்திகளின் சதிகளை
முறியடிக்க வேண்டும் .