அப்பாவி சிறைவாசிகளை பிணையில் விடுவிக்கக் கோரி ”சட்டப்படி பிணையில் விடு அப்பாவிகளை விடுதலை செய்” என்ற
முழகத்தை முன்வைத்து கடந்த 15.08.2012 முதல் 15.09.2012 வரை பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அதன் நிறைவாக டெல்லி
(ஜந்தர் மந்தர்) மற்றும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட
இடங்களில் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டத்தை 15.09.2012 அன்ற
ஒரே நேரத்தில் நடத்தியது.
இப்போராட்டத்தில் பெருந்திரளான
மக்கள் கலந்து கொண்டு நீதிக்கான போராட்டத்தில் தங்களின் கைகளும் துணை நிற்கும்
என்பதை உறுதி செய்தனர்.