முஸ்லீம்கள் உயிரினும் மேலாக
மதிக்க்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில்
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மகாணத்தில் வசிக்கும் யுத இனத்தைச் சேர்ந்த ஷாம்
பேசிலி என்ற திரைப்பட இயக்குனரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற
கிருஸ்தவ போதகரும் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
இதனால் உலகம் முழுவதும் முஸ்லீம் சமூக மக்களிடையே பெரும்
கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு நாடுகளில் அமெரிக்காவை கண்டித்து பலவகையான
போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.எகிப்து,லிபியா,யெமன்,துனீசியா,பாகிஸ்தான்,லெபனான்,சூடான்,இந்தியா,மெராக்கா,
ஃபலஸ்தீன்,பங்களாதேஸ்,ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில்
ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி
வருகின்றனர்.
Ø “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்
அனைத்து முஸ்லிம்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு
கேட்க வேண்டும்” ,
Ø “இந்திய அரசு அமெரிக்க மற்றும்
இஸ்ரேலுடனான துதரக உறவை துண்டிக்க வேண்டும்”.
ஆகிய
கோரிக்கைகளை வலியுறுத்தி 14.09.2012 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் அமெரிக்காவை கண்டித்து கடையநல்லூர்
மணிக்கூண்டில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ந்டைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர்
ஃப்ரண்ட் மாவட்டத் தலைவர் K. லுக்மான் ஹக்கீம்
அவர்கள் தலைமை தாங்க SDPI - கட்சியின் மாவட்ட தலைவர் சங்கை J.ஜாபர் அலி உஸ்மானி கண்டன உரையாற்றினார். நன்றியுரை பாப்புலர்
ஃப்ரண்ட் கடையநல்லூர் நகரச் செயலாளர் S. முஹம்மது கனி வழங்கினார்கள்.
இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இப்படிக்கு,
அபு ஹம்ஸா (ஊடக
தொடர்பாளர்)
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
நெல்லை மேற்கு மாவட்டம்.